ETV Bharat / state

நெல்லையின் பிரம்மாண்ட திருமணம்! ஆர்.எஸ். முருகன் அலுவலகத்தில் ஐடி ரெய்டு!

திருநெல்வேலியில் மிகப் பிரம்மாண்ட முறையில் திருமண விழா நடத்திய அரசு ஒப்பந்ததாரர் ஆர்.எஸ் முருகன் அலுவலகத்திலும், தமிழ்நாடு அரசின் கூட்டுறவு வங்கி அலுவலகத்திலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

அரசின் கூட்டுறவு வங்கி நெல்லை அலுவலகத்தில் ஐடி ரெய்டு
அரசின் கூட்டுறவு வங்கி நெல்லை அலுவலகத்தில் ஐடி ரெய்டு (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 28, 2024, 2:09 PM IST

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் விஜய நாராயணம் பகுதியைச் சேர்ந்தவர் ஆர்.எஸ் முருகன். இவர் தமிழக நெடுஞ்சாலை துறையின் பிரபல ஒப்பந்ததாரர் ஆவார். இவரது நிறுவனத்தின் மூலம் திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நெடுஞ்சாலை துறையில் பணிகள் பல கோடி மதிப்பில் செய்யப்பட்டு வருகிறது.

நெல்லை தென்காசி மாவட்டங்களில் பெரும்பாலான சாலைகள் இவரது நிறுவனத்தால் போடப்பட்ட சாலைகளாக இருப்பது குறிப்பிடத்தக்கது. அந்த அளவுக்கு பிரபலமான ஒப்பந்ததாரர் இவர். குறிப்பாக அதிமுக, திமுக என தமிழகத்தில் இரு கட்சிகள் மாறி மாறி ஆட்சி அமைத்தாலும் கூட, இரண்டு ஆட்சிகளிலும் செல்வாக்கு பெற்று அரசின் ஒப்பந்தங்களை பெறுவதில் ஆர்.எஸ் முருகன் வல்லவராக இருந்து வருகிறார்.

இந்த நிலையில் நெல்லை பெருமாள் புரம் பகுதியில் அமைந்துள்ள ஆர்.எஸ் முருகன் அலுவலகத்தில் நேற்று முன்தினம் (நவம்பர்.26) செவ்வாய்கிழமை வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். நெல்லை வருமானவரித்துறை அலுவலர் மகாராஜன் தலைமையிலான வருமானவரித்துறை, டிடிஎஸ் பிரிவு அதிகாரிகள் 4க்கும் மேற்பட்டோர் சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக சோதனையில் ஈடுபட்டனர்.

இதில் ஆர்.எஸ் முருகன் நிறுவனத்தின் மூலம் எடுக்கப்பட்ட ஒப்பந்தங்கள் மற்றும் அதற்கு கட்டப்பட்ட டிடிஎஸ் (TTS) தொகை உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு நடத்தியுள்ளனர். சோதனை நிறைவில் ஒப்பந்தங்களுக்கான டிடிஎஸ் கட்டப்பட்டதிற்கான பல்வேறு ஆவணங்கள் சமர்ப்பிக்க கோரி அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கி சென்றுள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் நெல்லை மாநகராட்சிக்கு எதிர்ப்புறம் அமைந்துள்ள வணிக வளாகத்தில் மிக பிரம்மாண்டமான முறையில் தனது மகனுக்கு ஆர்.எஸ் முருகன் திருமணம் நடத்தி வைத்ததார். அந்த திருமணத்திற்காக செய்யப்பட்டிருந்த பிரம்மாண்ட ஏற்பாடுகள் தொடர்பான காட்சிகள் அடங்கிய திருமண வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் ஆகிவருகிறது.

இதையும் படிங்க: காதலியை 50 துண்டுகளாக வெட்டிய கறிக்கடை தொழிலாளி.. கொலைக்கு முன் பாலியல் வன்கொடுமை.. பதறும் க்ரைம் சீன்!

அதில் குறிப்பாக மணப்பெண் கிலோ கணக்கில் தங்க நகைகள் அணிந்து வருவது போன்ற காட்சிகளும் பிரபல விஐபிகள் திருமணத்தில் கலந்து கொண்டது போன்ற காட்சிகளும் வைரலாகி வருகிறது. எனவே நெல்லை ஆர்.எஸ் முருகன் இல்ல திருமண விழா பேசு பொருளாக இருந்து வருகிறது. இது போன்ற சூழ்நிலையில் அவரது அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றதால் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

இந்நிலையில் அந்த பரபரப்பு அடங்குவதற்குள் ஆர்.எஸ் முருகன் அலுவலகத்தில் நடைபெற்ற சோதனையின் தொடர்ச்சியாக அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று (நவம்பர்.27) அதிகாலை வரை கூட்டுறவு வங்கிகளும் சோதனை நடத்தினர்.

கூட்டுறவு வங்கி மூலம் ஆர்.எஸ் முருகன் பல்வேறு பண பரிவர்த்தனை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக அரசு ஒப்பந்தங்கள் தொடர்பாக கூட்டுறவு வங்கி மூலம் பண பரிமாற்றம் நடைபெற்றதாகவும், அதுதொடர்பாக இச்சோதனை நடந்தாகவும் உளவுத் துறை போலீசார் தகவல் தெரிவித்தனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.