ETV Bharat / state

காலை 11 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS @ 11 AM - 11 மணி செய்திச் சுருக்கம்

ஈடிவி பாரத்தின் காலை 11 மணி செய்திச் சுருக்கம்.

top 10 news at 11 am
காலை 11 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS @ 11 AM
author img

By

Published : Apr 3, 2021, 11:02 AM IST

இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் சிறுவன் - ராணுவ வீரர்கள் செய்தது என்ன?

இந்திய எல்லைக்குள் நுழைந்த சிறுவனுக்கு ராணுவ வீரர்கள் உணவளித்து பாதுகாப்பாக திருப்பி அனுப்பியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

'பாதுகாப்பு நெறிமுறைகள் கடைப்பிடிப்பதைத் தீவிரப்படுத்துங்கள்!'

கரோனா பரவல் வேகம் அதிகரித்துள்ளதால், சுகாதாரத் துறை அலுவலர்கள் கட்டுப்பாட்டு வழிமுறைகளைத் தீவிரமாகக் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் பரிசோதனையின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வ விநாயகம் உத்தரவிட்டுள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உறவினர் வீட்டில் வருமானவரி சோதனை - சிபிஎம் கண்டனம்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் வீடு உள்ளிட்ட 5 இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடத்தப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

பவானிசாகர் தொகுதியில் வாக்குப்பதிவிற்கான முன்னேற்பாடு தீவிரம்

பவானிசாகர் தொகுதியில் வாக்குப்பதிவுக்குத் தேவையான 36 வகையான பொருள்கள் தரம்பிரித்து அடுக்கும் பணி தீவிரமாக நடந்துவருகிறது.

இனிமேல் நமக்குள் சாதிச்சண்டை வேண்டாம் - வேல்முருகன் கண்ணீர்

30 ஆண்டுகளாக எதிர்த்த விடுதலை சிறுத்தைகள்தான் இன்று கட்டியணைத்து தனக்காக வேலை பார்ப்பதாகவும், இனிமேலும் நமக்குள் சாதிச் சண்டை வேண்டாம் என்றும் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் கண்ணீர் மல்க கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்தத் தேர்தல் யாருக்கானது என்று சிந்திக்க வேண்டும் - மாணிக்கம் தாகூர்

இந்தத் தேர்தல் விருதுநகரின் வளர்ச்சிக்கானதா அல்லது வன்முறைக்கானதா என்று வாக்குச்சாவடி செல்லும்போதும் முன்னரும் சிந்திக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம் என்று மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

கரூரும் அரவக்குறிச்சியும் எனது இரு கண்கள் - செந்தில்பாலாஜி

பல்லை உடைப்பேன் எனப்பேசிய பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு அரவக்குறிச்சி மக்கள் வரும் 6 ஆம் தேதி பதில் அளிப்பார்கள் என கரூர் தொகுதி திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார்.

ஆன்லைன் காதலனைத் தேடி கிராமத்திற்குச் சென்ற ஹை-டெக் காதலி: நெகிழ்ச்சி கதை!

இன்ஸ்டாகிராமில் தொடங்கிய நட்புப் பயணம், ஐந்தே மாதத்திற்குள் திருமணம் வரை சென்ற நெகிழ்ச்சி காதல் கதை வியப்படையச் செய்கிறது.

இன்றும் தொடரும் தீண்டாமை கொடுமை

தேவநஹள்ளியில் கிராமவாசிகளால் விரட்டப்பட்ட குடும்பம், கடந்த 20 ஆண்டுகளாகப் புறநகரில் குடிசை அமைத்து வாழ்ந்துகொண்டிருக்கும் துயரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே மாதத்தில் கொல்லப்பட்ட 305 பேர்: ஆப்கானில் தொடரும் மரணங்கள்

ஆப்கானில் கடந்த மாதத்தில் குண்டுவெடிப்பு, துப்பாக்கிச் சூடு போன்றவற்றில் குறைந்தது 305 பேர் உயிரிழந்திருக்கக்கூடும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.