ETV Bharat / state

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 09 AM

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச் சுருக்கம்.

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 09 AM
9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 09 AM
author img

By

Published : Aug 13, 2020, 9:00 AM IST

1. கமலா ஹாரிஸ்: வேர்களை மறக்காத தமிழ் வம்சாவளி பெண்

டெல்லி: ட்ரம்ப் இனி என் சகோதரி மகளை ’இந்தியன் கமலா’ என அழைப்பார் என்று அமெரிக்க ஜனநாயக கட்சி துணை அதிபரின் மாமா கோபாலன் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.

2. கொந்தகையில் மேலும் ஒரு மனித எலும்புக்கூடு கண்டெடுப்பு

மதுரை: கீழடி அருகே உள்ள கொந்தகையில் நடைபெற்று வரும் அகழாய்வின் போது ஆறாவது முறையாக நேற்று (ஆக.12) மற்றொரு மனித எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

3. தாய்ப்பால் மூலம் கரோனா பரவுமா? - ஆய்வில் வெளியான தகவல்!

சிட்னி: தாய்ப்பாலை பாஸ்டுரைசிங் செய்யும்போது, கரோனா வைரஸ் தொற்றை செயலிழக்க செய்கிறது என்ற தகவலை ஜர்னல் ஆஃப் பீடியாட்ரிக்ஸ் அண்ட் சைல்ட் ஹெல்த் பத்திரிகை வெளியிட்டுள்ளது.

4. சுஷாந்த் மரணத்தை வைத்து மகாராஷ்டிரா அரசு மீது அவதூறு பரப்பப்படுகிறது - சிவசேனா எம்பி குற்றச்சாட்டு

மும்பை: சுஷாந்தின் மரணத்தை வைத்து மகாராஷ்டிரா அரசு மீது அவதூறு பரப்ப சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளது என சிவசேனா எம்.பி., சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

5. சென்னை விமான நிலையத்தில் ரூ.1.65 கோடி போதைப் பொருள்கள் பறிமுதல்!

சென்னை: நெதர்லாந்து, பெல்ஜியம் நாடுகளிலிருந்து மருத்துவ பொருள்கள் என்று இந்தியாவிற்கு கடத்தப்பட்ட ரூ.1.65 கோடி மதிப்புடைய போதைப் பொருள்கள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டன.

6. கேரளத்து கதகளியே... பார்வதி நாயர்

கேரளத்து கதகளியே... பார்வதி நாயரின் சமீபத்திய புகைப்படத் தொகுப்பு!

7. நடிகர் கொட்டாச்சி இயக்கிய குறும்படம் என் கண்களை ஈரமாக்கி விட்டது - பார்த்திபன்

தமிழ் படங்களில் காமெடி நடிகராகவும் துணை நடிகராகவும் நடித்தவர் கொட்டாச்சி. இந்த கரோனா காலத்தில் கொட்டாச்சி இயக்கி, நடித்த "வறண்ட விழிகள்" குறும்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இயக்குநர் சீனுராமசாமி, விஜய் சேதுபதி ஆகியோர் பாராட்டு தெரிவித்த நிலையில் தற்போது நடிகர் பார்த்திபன் இந்த படத்தை பார்த்து கண்ணீர் வடித்ததாக ஆடியோ மூலம் பாராட்டு தெரிவித்துள்ளார். நடிகர் பார்த்திபன் பேசிய ஆடியோ வைரலாகி வருகிறது.

8. டெஸ்லா ஸ்மார்ட்வாட்ச் : குழந்தைகளுக்காக வெளிவரும் டெஸ்லாவின் ஸ்மார்ட் படைப்பு!

டெஸ்லா நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ள சிறுவர்களுக்கான ஸ்மார்ட் கைக்கடிகாரத்தில் ஏராளமான தொழில்நுட்ப வசதிகளும் இடம்பெறவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் புதிய தயாரிப்பிற்காக டெஸ்லா நிறுவனம், நார்வே நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் எக்ஸ்பிளோரா எனும் நிறுவனத்துடன் இணைந்துள்ளது.

9.'எஸ்.வி சேகர் மீதான நடவடிக்கை எப்போது?’ - காவல் ஆணையர் பதில்!

சென்னை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறு பரப்பிய எஸ்.வி. சேகர் மீதான புகார் சட்ட ஆலோசனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதுகுறித்த அறிக்கை வந்த பின் அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.

10.புல்வாமாவில் ஹிஸ்புல் அமைப்பின் தளபதி சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்: ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் முக்கிய தளபதியான அசாத் லஹாரி ராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.