ETV Bharat / state

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9PM - top 10 news etv bharat tamil

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச் சுருக்கம்.

top-10-news-9-pm
top-10-news-9-pm
author img

By

Published : Jul 17, 2020, 9:07 PM IST

தமிழ்நாட்டில் 4,538 பேருக்குக் கரோனா தொற்று உறுதி!

சென்னை: தமிழ்நாட்டில் இன்று (ஜூலை 17) 4,538 பேருக்குப் புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மொத்த பாதிப்பு 1 லட்சத்து 60 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

குடிநீர் அபிவிருத்தி திட்டப் பணிகள் நிறைவேற்றப்படும் - முதலமைச்சர் பழனிசாமி

சேலம்: எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஐந்து பேரூராட்சிகளில் ரூ.17.30 கோடி மதிப்பீட்டில் குடிநீர் அபிவிருத்தி திட்டப் பணிகள் நிறைவேற்றப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தயங்காமல் பிளாஸ்மா தானம் செய்வோம்! சக உயிர்களைக் காப்போம்! - முதலமைச்சர்

சென்னை: தயங்காமல் பிளாஸ்மா தானம் செய்வோம், சக உயிர்களைக் காப்போம் என பிளாஸ்மா தானம் செய்ய மக்களை ஊக்குவிக்கும் விதமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டரில் காணொலி ஒன்றை பதிவிட்டுள்ளார்.

தங்கக் கடத்தல் வழக்கு: அமீரக தூதரின் கேரள பாதுகாவலர் மாயம்!

ஐக்கிய அரபு அமீரக தூதரின் பாதுகாவலரான ஜெய்கோஷை காணவில்லை என அவரது குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

பங்குச் சந்தை நிலவரம்: 500 புள்ளிகளுக்கு மேல் ஏற்றம் கண்ட சென்செக்ஸ்!

நேற்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 548.46 புள்ளிகள் உயர்ந்து 37,020.14 புள்ளிகள் என வர்த்தகம் நிறைவுற்றது.

எல்லை ஒப்பந்தத்தை சீனா இப்போது மீறக் காரணம் என்ன? - ராகுல் கேள்வி

இந்தியாவுடன் மேற்கொண்ட எல்லை ஒப்பந்தத்தை சீனா இப்போது மீறுவதற்கு காரணம் என்ன? என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒப்பந்தங்களின் அடிப்படையில் சர்வேத விமான போக்குவரத்து!

டெல்லி: இருநாட்டு ஒப்பந்தங்களின் அடிப்படையில் சர்வதேச விமானப் போக்குவரத்தைத் தொடங்குவது என்பது ஒரு சிறந்த வழியாகத் தோன்றினாலும், போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டவுடன் இந்த நாடுகளில் கரோனா பாதிப்பு அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

'டைட்டானிக்' இளவரசியை அலங்கரிக்கப்போகும் இன்னொரு விருது

இந்தாண்டு நடைபெறவிருக்கும் டொரண்டோ திரைப்பட விழாவில் நடிகை கேட் வின்ஸ்லெட் ட்ரிப்யூட் ஆக்டர் விருதினை பெற உள்ளார்.

ஜிடேனின் மேஜிக் - 34ஆவது முறையாக பட்டம் வென்ற ரியல் மாட்ரிட்

மாட்ரிட்: வில்லாரியலுடன் நடைபெற்ற லீக் போட்டியில் 2-1 என்றக் கணக்கில் ரியல் மாட்ரிட் வெற்றிபெற்றத்தன் மூலம் லா லீகா பட்டத்தை அந்த அணி தட்டிச் சென்றது.

ஹெச்.சி.எல். தலைமைப் பொறுப்பிலிருந்து விலகும் சிவ் நாடார்; மகள் ரோஷிணிக்குப் பொறுப்பு

ஹெச்.சி.எல் நிறுவனத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து சிவ் நாடார் விலகியுள்ளார். அவரது மகள் ரோஷிணி புதிய தலைவராக பொறுப்பேற்கிறார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.