ETV Bharat / state

9 மணி செய்திச் சுருக்கம் - Top 10 News @ 9 am

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச் சுருக்கம்...

author img

By

Published : Jun 30, 2021, 9:10 AM IST

Top 10 News  9 am
Top 10 News 9 am

சரித்திரம் பேசும் சமூக ஊடகங்கள் நாள் இன்று!

உலகத் தகவல்களை 'உள்ளங்கையில் அடங்கும் அலைபேசி'யின் வழியே நாம் அறிந்துகொள்ள உதவும் சமூக ஊடகங்களின் நாளான இன்று (ஜூன் 30) #SocialMediaday என்ற ஹேஷ்டேக் மூலம் ஒவ்வொருவரும் சமூக ஊடகங்களில் வாழ்த்துகளைத் தெரிவித்துவருகின்றனர்.

பிரதமர் மோடி தலைமையில் இன்று ஒன்றிய அமைச்சரவைக் கூட்டம்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஒன்றிய அமைச்சரவைக் கூட்டம் இன்று (ஜூன் 30) காணொலி காட்சி மூலம் நடைபெறவுள்ளது.

அண்ணா நினைவு இல்லம் செல்லும் ஸ்டாலின்!

முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (ஜூன் 30) பேரறிஞர் அண்ணா நினைவு இல்லத்திற்குச் சென்று அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தவுள்ளார்.

விடைபெறுகிறார் என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் ஜே.கே. திரிபாதி!

சென்னை: தமிழ்நாடு காவல் துறை சட்டம் ஒழுங்கு டிஜிபியாகப் பணியாற்றிவரும் ஜே.கே. திரிபாதி இன்றுடன் (ஜூன் 30) ஓய்வுபெறுகிறார்.

’சிறுபான்மையினருக்கும் அரசுக்கும் பாலமாகச் செயல்படுவேன்’ - பீட்டர் அல்போன்ஸ்
சிறுபான்மையினருக்கும் அரசுக்கும் இடையே பாலமாகச் செயல்படப்போவதாகத் தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

சாக்கடையில் குடிநீா் குழாய்: சுகாதாரமற்ற குடிநீரை பருகும் கிராம மக்கள்

குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி அமைத்து, அதன் மூலம் சீரான குடிநீர் விநியோகம் செய்யவேண்டுமென சோகத்தூர் அருகே கிராம மக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஆன்லைன் தேர்வு: செல்போன் சிக்னலுக்காக 16 கி.மீ. அலையும் மாணவி

ஆன்லைன் தேர்வு எழுத நாள்தோறும் 16 கி.மீ. நடந்துசெல்கிறார் திருநெல்வேலியைச் சேர்ந்த ரம்யா என்கிற மாணவி. 5 ஜி இணைய வேகம் குறித்து விவாதம் நடந்துவரும் சூழலில், கடைக்கோடியில் கல்வி என்னும் பெரும் கனவைச் சுமந்துவரும் அவருக்கு இந்தப் பெருந்தொற்று காலத்தில் இணையத்தை அணுகுவதுதான் பெரிய சவாலாக இருக்கிறது.

அதிமுக ஆட்சியில் பத்திரப்பதிவுத்துறை ஊழல் துறையாக இருந்தது - அமைச்சர் மூர்த்தி

அதிமுக ஆட்சியில் பத்திரப்பதிவுத்துறை என்பது முழுவதும் ஊழல் துறையாக இருந்தது என தமிழ்நாடு அமைச்சர் மூர்த்தி குற்றம்சாட்டியுள்ளார்.

சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் செம குத்தாட்டம் போட்ட விஜய் சேதுபதி

'மாஸ்டர் செஃப்' நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பில் விஜய் சேதுபதி குத்தாட்டம் போட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகிறது.

ஓடிடியில் வெளியாகிறது 'சார்பட்டா' திரைப்படம்?

சென்னை: நடிகர் ஆர்யா நடித்துள்ள 'சார்பட்டா' திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக சமூக வலைதளங்களில் கூறப்படுகிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.