ETV Bharat / state

7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7PM

author img

By

Published : Jul 11, 2020, 7:04 PM IST

ஈடிவி பாரத்தின் 7 மணி செய்திச் சுருக்கம்.

ஈடிவி பாரத் தமிழ் செய்திகள்
ஈடிவி பாரத் தமிழ் செய்திகள்

அமைச்சர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதே அரசின் சிறப்பான பணிகளின் சாட்சியே - பாஜக

திருப்பூர் : கோவிட்-19 தடுப்பு நடவடிக்கைகளின் தமிழ்நாடு அரசு சிறப்பாக பணியாற்றியதன் சாட்சிதான் பல அமைச்சர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதாக, பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழர்களின் கைவண்ணத்தில் உருவாகும் தெலங்கானா தலைமைச் செயலகம்!

ஹைதராபாத்: தெலங்கானாவில் அமையவுள்ள புதிய ஒருங்கிணைந்த சட்டப்பேரவைக் கட்டடத்தை வடிவமைக்க தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆஸ்கர்&பொன்னி என்ற கட்டடக்கலை நிறுவனத்தை அம்மாநில அரசு தற்போது தேர்வுசெய்துள்ளது.

'பணப்புழக்கம் அதிகரித்து பொருளாதாரம் மீட்கப்படும்' - ரிசர்வ் வங்கி ஆளுநர் நம்பிக்கை

மும்பை: நாட்டில் பணப்புழக்கத்தை அதிகரித்து பொருளாதாரத்தை மீட்கும் நடவடிக்கையை ரிசர்வ் வங்கி தொடர்ச்சியாக மேற்கொண்டுவருவதாக அந்த வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

அரியலூரில் 7 நாள்கள் முழு ஊரடங்கைக் கடைப்பிடிக்க வியாபாரிகள் முடிவு!

அரியாலூரில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக மாவட்டத்தைச் சேர்ந்த வியாபாரிகள் 7 நாள்கள் முழு ஊரடங்கைக் கடைப்பிடிக்க முடிவு செய்துள்ளனர்.

பரோல் விதிகளில் மாற்றம் தேவை - சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை: இரண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை பெற்ற கைதிகளுக்கு பரோல் வழங்குவதற்கான சிறை விதிகளில் திருத்தம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

புதுவையில் இன்று 64 பேர்களுக்கு கரோனா உறுதி!

புதுச்சேரி மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 64 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்து 336ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18ஆக உயர்ந்துள்ளது.

படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்பே சர்ச்சையில் சிக்கிய மிஷ்கின் திரைப்படம்!
இயக்குநர் மிஷ்கின் தயாரிக்கும் 'பிதா' திரைப்படம் ஷூட்டிங் துவங்குவதற்கு முன்பே சர்ச்சையில் சிக்கியுள்ளது.

ஹெச்பிஓ மேக்ஸ் நிறுவனத்துடன் இணைந்த பேட்மேன் பட இயக்குநர்!

பேட்மேன் திரைப்பட இயக்குனர் மாட் ரீவ்ஸ் ஹெச்பிஓ மேக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து சீரிஸ் ஒன்றை இயக்கவுள்ளார்.

'கிராமங்களை கரோனா தொற்றிலிருந்து காக்க வேண்டும்' - கமல்ஹாசன்

சென்னை: தமிழ்நாட்டில் பல கிராமங்களில் ஆரம்பச் சுகாதார மையங்கள் முறையான கட்டமைப்பின்றி செயல்படுவதால், கரோனா தொற்று கிராமங்களில் பரவும் முன் அதைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார.

'சென்னையில் மேற்கொண்ட கரோனா தடுப்பு நடவடிக்கைகள் பிற மாவட்டங்களிலும் வேண்டும்' - எல்.முருகன்

சென்னை: சென்னையைப் போல் மற்ற மாவட்டங்களிலும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு பரவலைக் குறைக்க வேண்டும் என்று எல். முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.