ETV Bharat / state

7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7PM - etv bharat 7 PM news

ஈடிவி பாரத்தின் 7 மணி செய்திச் சுருக்கம்.

top-10-news-7-pm
top-10-news-7-pm
author img

By

Published : Jul 16, 2020, 6:58 PM IST

தமிழ்நாட்டில் இன்று 4 ஆயிரத்து 549 பேருக்கு கரோனா

தமிழ்நாட்டில் இன்று (ஜூலை 17) 4 ஆயிரத்து 549 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதன் மூலம், பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 56 ஆயிரத்து 369ஆக அதிகரித்துள்ளது.

பொறியியல் படிப்பில் சேர ஆர்வம் காட்டும் மாணவர்கள்!

சென்னை: இளங்கலை பொறியியல் படிப்பில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஒரே நாளில் 21 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.

மூன்றரை ஆண்டுகளில் ரயில்வே 100 விழுக்காடு மின்மயமாகும் - பியூஸ் கோயல்

டெல்லி: அடுத்த மூன்றரை ஆண்டுகளில் இந்தியன் ரயில்வே நூறு விழுக்காடு மின்மயமாக்கப்படும் என ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் 4ஜி சேவை: மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் மறுப்பு!

டெல்லி: ஜம்மு காஷ்மீரில் 4ஜி சேவையைத் தொடங்குவது குறித்த வழக்கில் நீதிமன்றத்தை மத்திய அரசு அவமதித்ததாகக் கூறி, நோட்டீஸ் அனுப்ப மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது.

அரசு கலைக் கல்லூரி மாணவர்களும் ஆன்லைனில் விண்ணப்பிகலாம் - அமைச்சர் கே.பி. அன்பழகன்

அரசு கலைக் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் வரும் திங்கட்கிழமை முதல் ஆன்லைனில் விண்ணப்பிகலாம் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்தார்.

பிகார்: ஒரு மாதம் கூட ஆகாத பாலம் இடிந்து விழுந்த பரிதாபம்!

பாட்னா: ரூ.263.48 கோடி செலவில் கட்டப்பட்டு திறப்பு விழா கண்டு ஒரு மாதம் கூட கடக்காத பாலம் இடிந்து விழுந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

'தமிழ்க் கடவுளை அசிங்கப்படுத்தினால் காவிப் படை எதிர்த்து நிற்கும்' - எல். முருகன்

தமிழ்க் கடவுளைத் தவறாகச் சித்தரிப்பதை அவர்கள் நிறுத்தவில்லை என்றால் காவிக் கூட்டம் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் எனவும், கறுப்பர் கூட்டம் சேனல் தொகுப்பாளர் சுரேந்திரன் ஒரு சமூக விரோதி எனவும் தமிழ்நாடு பாஜக தலைவர் எல். முருகன் கூறியுள்ளார்.

கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனல் தொகுப்பாளர் நாத்திகன் போலீசில் சரண்!

புதுச்சேரி: கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனல் தொகுப்பாளர் நாத்திகன் என்ற சுரேந்தர் நடராஜன் அரியாங்குப்பம் கோட்டைமேட்டில் காவல் துறையினரிடம் சரணடைந்தார்.

நடிகர் மாதவனின் +2 மதிப்பெண் எவ்வளவு தெரியுமா?

நடிகர் மாதவன் தனது +2 மதிப்பெண் குறித்து வெளிப்படையாக அறிவித்துள்ளார்.

பாதுகாப்பை மீறி வீட்டுக்குச் சென்ற ஆர்ச்சரை ஓரங்கட்டிய இங்கிலாந்து!

லண்டன்: கரோனா பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதால் இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.