ETV Bharat / state

5 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 5 PM - 5 மணி செய்திச் சுருக்கம்

ஈடிவி பாரத்தின் 5 மணி செய்திச் சுருக்கம் இதோ...

5 மணி செய்திச் சுருக்கம்
5 மணி செய்திச் சுருக்கம்
author img

By

Published : Oct 25, 2020, 4:59 PM IST

இடஒதுக்கீடு விவகாரம்: திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்

சென்னை: மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 விழுக்காடு இடஒதுக்கீட்டு விவகாரத்தில் நீதியரசர் பி.கலையரசன் குழு அளித்த பரிந்துரை, ஆளுநர் திருத்தி அனுப்பக்கோரிய மசோதா என பல்வேறு தகவல்களை பகிர்ந்து தொண்டர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

2021 தேர்தல்: தீவிரம் காட்டும் திமுக மகளிரணி

2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை திமுக மகளிரணி மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது.

ஷேர் ஆட்டோவில் சென்றால் கூட தலைக்கவசமா?: அபராதம் விதித்த போக்குவரத்து காவல் துறை

மதுரை: தலைக்கவசம் அணியாமல் வந்ததாக ஷேர் ஆட்டோ ஓட்டுநருக்கு போக்குவரத்து காவல் துறையினர் 200 ரூபாய் அபராதம் விதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சாதியை சொல்லி திட்டியதால் தாக்கினேன்: வழக்கறிஞர் மீது வழக்குப்பதிவு!

நெல்லையில் வழக்கறிஞர் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, சாதிப் பெயரைச் சொல்லி திட்டியதால் தான் தாக்கினேன் என ஹோட்டல் ஊழியர் கொடுத்த புகாரின்பேரில் வழக்கறிஞர் பிரம்மா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

குஜராத்தில் லேசான நில அதிர்வு

காந்திநகர்: குஜராத்தில் இன்று ஏற்பட்ட நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவாகியுள்ளது.

டார்ஜிலிங்கில் சாலையைத் திறந்து வைத்த ராஜ்நாத் சிங்!

எல்லை சாலை அமைப்பினரால் அமைக்கப்பட்ட காங்டோக்- நாதுலா மாற்றுவழிச் சாலையை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று திறந்துவைத்தார்.

நியூயார்க்கில் தொடங்கியது முன் கூட்டியே வாக்களிக்கும் நடைமுறை!

வாஷிங்டன்: முன்கூட்டியே வாக்களிக்கும் நடைமுறையை பயன்படுத்தி, அமெரிக்க அதிபர் தேர்தலில் நியூயார்க்கில் மக்கள் வாக்கு செலுத்தி வருகின்றனர்.

ஆஸி., தொடருக்குத் தயாராகும் இந்திய அணி!

இந்தாண்டு இறுதியில் நடைபெறவுள்ள ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடருக்கு, இந்திய அணியின் பயிற்சியாளர், அணி ஊழியர்கள் ஐக்கிய அரபு அமீரகத்திற்குச் சென்றுள்ளனர்.

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் கபில் தேவ்!

நெஞ்சு வலி காரணமாக டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ், சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.

விக்ரம் பிரபுவிற்கு ஒளியாகிய வாணி போஜன்

விக்ரம் பிரப நடிப்பில் உருவாகவுள்ள திரைப்படத்திற்கு பாயும் ஒளி நீ எனக்கு எனப் பெயரிடப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.