ETV Bharat / state

3 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 3PM - top 10 news etv bharat tamil

ஈடிவி பாரத்தின் 3 மணி செய்திச் சுருக்கம்.

ஈடிவி பாரத் 3 மணி செய்தி
ஈடிவி பாரத் 3 மணி செய்தி
author img

By

Published : Jul 13, 2020, 2:57 PM IST

'தமிழ்நாட்டில் தற்போது இடைத்தேர்தல் நடக்க வாய்ப்பில்லை'

சென்னை: தமிழ்நாட்டில் காலியாக உள்ள தொகுதிகளில் இடைத்தேர்தல்கள் நடத்துவது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கவில்லை என மாநில தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளது.

கரோனா பணிகளில் பள்ளி ஆசிரியர்களை ஈடுபடுத்த தடையில்லை!

சென்னை: கரோனா தடுப்புப் பணிகளில் பள்ளி ஆசிரியர்களை ஈடுபடுத்த சென்னை மாநகராட்சிக்குத் தடைவிதிக்கக் கோரிய வழக்கைத் தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஒரே நாளில் 10 ஆயிரத்து 48 பேருக்கு கரோனா பரிசோதனை!

சென்னை: நேற்று (ஜூலை13) ஒரே நாளில் 10 ஆயிரத்து 48 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

'ஏழை மாணவர்களுக்கு வைட்டமின் மருந்துகள் வழங்க வேண்டும்' - அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தல்

சென்னை: ஏழை மாணவர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க சத்துணவு மையங்கள் மூலம் வைட்டமின் மருந்துகள் வழங்குவது போன்ற திட்டங்களை வகுக்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

அமைச்சர் மகனைத் தடுத்துநிறுத்திய பெண் காவலர் பணியிடமாற்றம்!

காந்திநகர்: ஊரடங்கின்போது வெளியில் சுற்றித்திரிந்த அமைச்சரின் மகனைத் தடுத்துநிறுத்திய பெண் காவலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

'எங்களுக்கு ஷேக்ஸ்பியரும் ஷெல்லியும் வைரமுத்துதான்' - பாரதிராஜா

சென்னை: ஷேக்ஸ்பியரும், ஷெல்லியும் வைரமுத்துதான் என்று இயக்குநர் இமயம் பாரதிராஜா வைரமுத்துக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ரோவர் விண்கலத்தை அருகிலிருந்து காணப்போகும் 13 வயது சிறுவன்!

வாஷிங்டன் : செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பவுள்ள ரோவர் விண்கலத்தை, அருகாமையில் இருந்து காணும் வாய்ப்பை வர்ஜீனியாவைச் சேர்ந்த சிறுவனுக்கு நாசா வழங்கியுள்ளது.

கரோனா நெருக்கடியிலும் தென் சீனக் கடலில் ஆதிக்கம் செலுத்தும் சீனா!

உலக நாடுகள் அனைத்தும் கரோனா பெருந்தொற்றுக்கு எதிராகக் கடுமையாகப் போராடிவரும் நிலையில், தென் சீனக் கடலில் சீனா தனது வல்லாதிக்கப் போக்கைத் தொய்வின்றி தொடர்வது சர்வதேச சமூகத்தின் பொறுமையைச் சோதிப்பதாக அமைந்துள்ளது.

குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளரை அறிமுகப்படுத்தப்போகும் அமெரிக்க - இந்தியர்!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான குடியரசுக் கட்சியின்(Republican Party of the United States) வேட்பாளரை முறையாக பரிந்துரைக்கும் குடியரசு தேசிய மாநாட்டின் (RNC - Republican National Committee) பிரதிநிதியாக இந்திய-அமெரிக்க மருத்துவர் சம்பத் சிவாங்கி நியமிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளன.

முதன்முறையாக மாஸ்க் அணிந்த ட்ரம்ப்... காரணம் என்ன?

வாஷிங்டன்: மருத்துவமனைக்கு பார்வையிட சென்ற அமெரிக்க அதிபர் ட்ரம்ப், முதன்முறையாக மாஸ்க் அணிந்து சென்றுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.