மதுரை டூ டோக்கியோ- ஒலிம்பிக் ரேவதியின் கதை!
மதுரையை சேர்ந்த தடகள வீராங்கனை ரேவதி வீரமணி இந்திய அணி சார்பாக ஒலிம்பிக் தடகள போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர், 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஆசிய அளவிலும், தேசிய அளவிலும் சாம்பியன்ஷிப் பட்டம் பெற்றவர்.
விதிகளை மீறி மோட்டார் படகுகள் பயன்பாடு: மீன்வளத்துறை இயக்குனருக்கு உத்தரவு
சென்னை: தேவனாம்பட்டினம் கடலில் விதிகளை மீறி 240 குதிரை திறன் கொண்ட மோட்டார் படகுகள் பயன்படுத்த தடைக்கோரிய மனு மீது முடிவெடுக்க வேண்டும் என மீன்வளத்துறை இயக்குனருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிபிஎஸ்இ தேர்வு முறையில் மாற்றம்!
சிபிஎஸ்இ மாணவர்களுக்கான பொதுத்தேர்வினை ஆண்டிற்கு இரண்டு முறை நடத்துவதால் மாணவர்களுக்கு நன்மையும், பாதிப்புகளும் இருக்கிறது. நீட், ஜெஇஇ போன்ற தேர்வுகளை எழுதும் மாணவர்களின் கல்வியின் தரத்தை உயர்த்தும் வகையில் அனைத்து மாநில அரசையும் கலந்தாலோசித்து முடிவெடுக்க வேண்டும் என கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி தெரிவித்தார்.
சிறுபான்மையினர் ஆணையத்துணை தலைவராக டாக்டர் மஸ்தான் நியமனம்
தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணைய துணை தலைவராக டாக்டர் மஸ்தான் நியமிக்கப்பட்டுள்ளார்.
மீண்டும் படப்பிடிப்பை தொடங்கிய அல்லு அர்ஜூனின் 'புஷ்பா'!
நடிகர் அல்லு அர்ஜூன் நடிப்பில் உருவாகி வரும் 'புஷ்பா' படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது.
பத்திரப்பதிவுகளில் கூடுதல் தொகை வாங்கினால் நடவடிக்கை - அமைச்சர் எச்சரிக்கை!
அனைத்து பத்திரப்பதிவுகளிலும் அரசு நிர்ணயித்த தொகையைவிட கூடுதல் தொகையை வாங்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் என வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி எச்சரித்துள்ளார்.
அதிக கட்டணம் - 40 தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை- அமைச்சர் மா. சுப்பிரமணியன்
கரோனோ சிகிச்சைக்காக அதிக கட்டணம் வசூல் செய்த 40 தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மேலடுக்கு சுழற்சி, வெப்பச்சலனம் காரணமாக 10 மாவட்டங்களில் மழை
பெரம்பலூர், அரியலூர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முத்தத்தில் இத்தனை வகைகளா?
தற்போது கரோனா பெருந்தொற்று காலம் என்பதால் தகுந்த இடைவெளியை கடைப்பிடித்து கொண்டாடுவது உத்தமம். இல்லை மொரட்டு சிங்கிள்ஸ் 90's கிட்ஸ் பாவம் சும்மா விடாது. இன்று சர்வதேச முத்த தினம். இந்தக் கரோனா நெருக்கடிக்கு மத்தியிலும் பாதுகாப்பாக முத்தத் தினம் கொண்டாடுவது குறித்து பார்க்கலாம்.
90ஆவது வயதில் காலடி எடுத்து வைக்கும் 'நகைச்சுவை செம்மல்' சித்ராலயா கோபு!
சென்னை: பழம்பெரும் இயக்குநரும் கதையாசிருமான சித்ராலயா கோபு தனது 90ஆவது பிறந்தநாளை கொண்டாடினார்.