ETV Bharat / state

3 மணி செய்திச் சுருக்கம் - TOP 10 NEWS 3 PM

author img

By

Published : Jun 4, 2021, 2:50 PM IST

ஈடிவி பாரத்தின் 3 மணி செய்திச் சுருக்கம் இதோ..

TOP 10 NEWS 3 PM
TOP 10 NEWS 3 PM

12ஆம் வகுப்பு தேர்வை நடத்துவதை விட்டுவிட்டு மாணவர்களின் நலன் கருதி நல்ல முடிவு எடுக்க வேண்டும் - சீமான்

சென்னை: மாணவர்களின் நலன் பாதுகாக்கப்பட வேண்டும்; எனவே 12ஆம் வகுப்பு தேர்வை நடத்துவதை விட்டுவிட்டு மாணவர்களின் நலன் கருதி நல்ல முடிவு எடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

பொறியியல் மறுதேர்வு வழிகாட்டு நெறிமுறைகள் - அண்ணா பல்கலைக்கழகம் வெளீயிடு

பொறியியல் மாணவர்களுக்கான மறுதேர்வுகளை எழுதும் வழிகாட்டுதல் நெறிமுறைகளை அண்ணா பல்கலைக்கழகம் இன்று (ஜூன் 4) வெளியிட்டுள்ளது.

ஓ.பன்னீர்செல்வம் கருத்துக்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கண்டனம்!

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு தமிழ்நாடு அரசு வழங்கிய ஓய்வூதிய நிலுவைத் தொகையை ஓபிஎஸ் கூறியதால் வழங்கியதாக தெரிவித்திருப்பது, அவரது கீழ்த்தரமான அரசியலைக் காட்டுவதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.

'ஆயிரம் நிலவே முதல் அண்ணாத்தே வரை' -வாழ்த்தோவியம் வெளியிட்ட ரசிகர்

பாடும் நிலா எஸ்பிபியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர் ஒருவர் அவர் பாடிய பாடல் வரிகளால் அவரது ஓவியத்தை வரைந்து வாழ்த்தோவியம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நகை வாங்க நல்ல நேரம்!

சென்னை: கரோனா காரணமாக ஏற்ற இறக்கங்களுடன் விற்பனையாகிவரும் தங்கம் இன்று (ஜூன் 4) அதிரடியாக விலை குறைந்துள்ளது.

'டெல்டா மாவட்டங்களில் இடியுடன்கூடிய கன முதல் மிக கனமழை பெய்யும்'

சென்னை: டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன்கூடிய கன முதல் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கறுப்பு, வெள்ளை, மஞ்சள் அடுத்து புதிதாக வந்தது தோல் பூஞ்சை

கரோனா நோயாளியைத் தாக்கும் தோல் பூஞ்சை கர்நாடகத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு விவகாரம்: விரைவில் அறிவிப்பு

12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வை நடத்துவது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று மாலை ஆலோசனை மேற்கொள்கிறார். அதனைத் தொடர்ந்து முதலமைச்சரை சந்தித்த பின்னர், விரைவில் தேர்வு அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டோக்கியோ ஒலிம்பிக்: இந்திய அணிக்கு விரைவாகத் தடுப்பூசி செலுத்த உத்தரவு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்குச் செல்லவுள்ள வீரர், வீராங்கனைகளுக்கு விரைவில் தடுப்பூசி செலுத்த பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

வெப் தொடரில் ஓவியா!

சென்னை: பிக்பாஸ் புகழ் ஓவியா பட வாய்ப்பு குறைந்ததால், வெப் தொடர் பக்கம் திரும்பியுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.