ETV Bharat / state

ஈடிவி பாரத்தின் 3 மணி செய்திகள் Top 10 news @ 3 pm - செய்திச் சுருக்கம்.

ஈடிவி பாரத்தின் 3 மணி செய்திச் சுருக்கம்.

TOP 10 NEWS 3 PM
TOP 10 NEWS 3 PM
author img

By

Published : Jan 2, 2021, 3:04 PM IST

1. நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி இலவசம் - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்

டெல்லி: நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.

2.புதுச்சேரியில் கரோனா தடுப்பூசி ஒத்திகை - முதலமைச்சர் ஆய்வு

புதுச்சேரியில் கரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற்ற இடங்களை அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி இன்று ஆய்வு செய்தார்.

3.தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளராக விஜய் வசந்த் தேர்வு!

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் நிர்வாகிகள் இன்று நியமனம் செய்யப்பட்டனர். இதில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளராக மறைந்த மக்களவை உறுப்பினர் வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.

4.103 கிலோ தங்கம் திருடப்பட்ட வழக்கு - லாக்கர் தயாரித்த நிறுவனத்திடம் விசாரணை

சென்னை: 103 கிலோ தங்கம் திருடப்பட்ட வழக்கில், தங்கம் வைக்கப்பட்டிருந்த லாக்கர் தயாரித்த நிறுவனத்திடம் சி.பி.சி.ஐ.டி காவல் துறையினர் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

5.இன்றைய தொடக்க நிலை நிறுவனங்கள், நாளைய பன்னாட்டு நிறுவனங்கள் - பிரதமர் மோடி

இன்றைய தொடக்க நிலை நிறுவனங்கள் வரும் காலத்தில் பன்னாட்டு நிறுவனங்களாக உருவெடுக்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

6.விசிக தனி சின்னத்தில் போட்டியிடும்: திருமாவளவன்!

புதுச்சேரி: நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தேர்தலில் விசிக தனி சின்னத்தில் போட்டியிடும் என விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.

7.மக்கள் நீதி மய்யத்தின் முதல் தொழிற்சங்கம் பதிவு!

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் தொழிலாளர் நல அணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் தொழிற்சங்கம் அமைக்கும் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில் நேற்று (ஜன.01) தமிழ்நாட்டில் முதல் தொழிற்சங்கம் பதிவு செய்யப்பட்டது.

8.பிரபு, விஜயகாந்த், சரத்குமார் படத் தயாரிப்பாளர் திடீர் மரணம்

சென்னை: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல தயாரிப்பாளர் கே.பி.பிலிம்ஸ் பாலு மாரடைப்பால் மரணமடைந்தார்.

9.மேஷ ராசி அன்பர்களே..! நம்பிக்கை, வாய்ப்புகள் நிறைந்த ஆண்டு!

2021ஆம் ஆண்டு பிறந்துள்ள நிலையில், மேஷ ராசி நேயர்களின் புத்தாண்டு ராசிபலன் குறித்து பார்க்கலாம்.

10.பிரிமியர் லீக்: மான்செஸ்டர் யுனைடெட் அணியிடம் வீழ்ந்த ஆஸ்டன் வில்லா!

ஆஸ்டன் வில்லா அணியை 2-1 என்ற கணக்கில் மான்செஸ்டர் யுனைடெட் வீழ்த்தியது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.