கும்பகோணம் பள்ளி தீ விபத்தின் 16ஆம் ஆண்டு நினைவு தினம்!
தஞ்சாவூர்: கும்பகோணம் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தின் 16ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.
கரோனா நிதி குறித்து வெளிப்படையாக அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு!
கரோனா நிவாரண நிதி அளித்தவர்கள் விவரம்? எவ்வளவு பெறப்பட்டது? பயனாளிகள் யார்? உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் இணையதளத்தில் வெளிப்படையாக வெளியிட வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எதிர்க்கட்சிகள் மக்களிடையே பீதியை கிளப்பக் கூடாது - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்
மதுரை: கரோனா அதிகமாக பரவுகிறது என எதிர்க்கட்சிகள் மக்களிடையே வீண் வதந்தியை கிளப்பக் கூடாது என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் எச்சரித்தார்.
கீழ்ப்பாக்கத்தில் உள்ள மனநல நோயாளிகள், மருத்துவர்கள், செவிலியர்கள் கரோனா பரிசோதனை மேற்கொள்ள உத்தரவு
சென்னை: கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள 800 பேருக்கும், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் உள்பட அனைவருக்கும் ஒரு வாரத்தில் கரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
12ஆம் வகுப்பு மாணவர்களின் மறு தேர்வுக்கான வழிகாட்டுதல் குறித்த அரசாணை வெளியீடு!
சென்னை: வரும் ஜூலை 27ஆம் தேதி நடைபெறவுள்ள, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வேதியியல், கணக்கியல் மற்றும் புவியியல் மறு தேர்வுக்கான வழிகாட்டுதல் குறித்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
உலகின் மிக மலிவான கரோனா பரிசோதனைக் கருவி - டெல்லி ஐஐடி அறிமுகம்
டெல்லி: உலகின் மிக மலிவான கரோனா பரிசோதனைக் கருவியை கரோனாஸ்யூர் என்ற பெயரில் டெல்லி ஐ.ஐ.டி. கல்வி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
உதவி கேட்டவரிடம் ரூ.50 ஆயிரம் ஆட்டைய போட்ட ஏடிஎம் திருடன்
புதுச்சேரி: ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுத்துத்தரக்கோரி உதவி கேட்டவரின் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி, ரூ.50 ஆயிரம் பணத்தை திருடிய நபரை காவல் துறையினர் கைது செய்தனர்.
மறைந்த சிரஞ்சீவி சார்ஜாவின் சகோதரருக்கு கரோனா!
மறைந்த சிரஞ்சீவி சார்ஜாவின் சகோதரரும், நடிகருமான துருவா சார்ஜாவுக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
சாபர் திட்டத்திலிருந்து இந்தியாவை விலக்கவில்லை - ஈரான் மறுப்பு
தெஹ்ரான்: சாபர் ரயில்வேத் திட்டத்திலிருந்து இந்தியாவை விலக்கியதாக வெளியானத் தகவல்களில் உண்மையில்லை என ஈரான் தெரிவித்துள்ளது.
கொலராடோவில் உள்ள அணிலுக்கு புபோனிக் பிளேக் தொற்று!
புபோனிக் பிளேக் நோய் பல நூற்றாண்டுகளாக இருந்து வருகிறது. மனித வரலாற்றில் மிக மோசமான தொற்றுநோய்க்கு இது காரணமாகும். இது மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று சுகாதார அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர்.