ETV Bharat / state

1 மணி செய்திச் சுருக்கம் - Top 10 News @ 1pm - டெலிவரி பாய்

ஈடிவி பாரத்தின் மதியம் 1 மணி செய்திச் சுருக்கம்..

Top 10 News @ 1pm
Top 10 News @ 1pm
author img

By

Published : Jun 19, 2021, 1:07 PM IST

'அந்த மனசுதான் சார்' - டெலிவரி பாய்க்கு 'பைக்' வாங்கிக் கொடுத்த வாடிக்கையாளர்

உணவு டெலிவரி செய்வதற்காக 9 கி.மீ. சைக்கிளில் வந்த டெலிவரி பாய் குறித்து வாடிக்கையாளர் ஒருவர் ஃபேஸ்புக்கில் பதிவிட்டு நிதி திரட்டி பைக் வாங்கிக் கொடுத்தது பலரது பாராட்டையும் பெற்றுவருகிறது.

60 ஆயிரமாக குறைந்த தினசரி கரோனா பாதிப்பு

இந்தியாவில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் தினசரி எண்ணிக்கை 60 ஆயிரமாகக் குறைந்துள்ளது.

கல்வித் தொலைக்காட்சியில் வகுப்புகளைத் தொடங்கிவைத்த முதலமைச்சர்

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா பாடநூல்கள் வழங்கும் நிகழ்வையும், கல்வித் தொலைக்காட்சியில் புதிய பாடங்கள் அடங்கிய வீடியோக்கள் ஒளிபரப்பு சேவையையும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

பப்ஜி மதனிடம் பணத்தை இழந்தீர்களா? புகாரளிக்க இமெயில் ஐடி வெளியீடு

பப்ஜி மதனிடம் பணத்தை இழந்தவர்கள் புகாரளிக்க மின்னஞ்சல் முகவரியை காவல் துறையினர் வெளியிட்டுள்ளனர்.

’அடிப்படை வசதிகளை உறுதி செய்யணும்’ - அமைச்சர் ரகுபதி

ஊராட்சி மன்றத் தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் கரோனா நிவாரண நிதி வழங்கும் நிகழ்வில், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும் எனச் சட்டத் துறை அமைச்சர் எஸ். ரகுபதி தெரிவித்தார்.

நடிகர் ரஜினிகாந்த் மருத்துவப் பரிசோதனைக்காக அமெரிக்கா பயணம்

வெளிநாடு செல்ல மத்திய அரசு அனுமதியளித்ததைத் தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்த் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள, இன்று (ஜூன். 19) சென்னையிலிருந்து அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.

சிங்கிள் ட்விட்டில் சிம்பு ரசிகர்கள் ஹேப்பி!

சிம்பு நடிப்பில் வெளியாகவிருக்கும் மாநாடு படத்தின் ‘மெஹ்ரேஸிலா’ எனத் தொடங்கும் பாடலின் டீசர் வீடியோ, இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Most Eligible Bachelor ராகுல் காந்திக்கு பிறந்தநாள்

சில்வர் ஸ்பூன் வளர்ப்பு எனப் பரவலாக பேசப்பட்டாலும், தான் மக்களுக்கான தலைவர் என்று நிரூபிக்க இடைவிடாமல் போராடி வருகிறார், காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி. அவரது பிறந்தநாளான இன்று கடந்த காலப் பயணங்கள் குறித்து தெரிந்துகொள்வோம்.

நெல்லை அமமுக மாவட்ட செயலாளர் திமுகவில் இணைந்தார்

நெல்லை கிழக்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழக செயலாளர் பரமசிவன் ஐயப்பன் இன்று திமுக பொதுக்குழு உறுப்பினர் பிரபாகரனை நேரில் சந்தித்து திமுகவில் இணைந்தார்.

'சிலையுடன் குத்துச் சண்டை பயிற்சி' - போதை இளைஞரின் அடாவடி

குடிபோதையில் இருந்த இளைஞர், சுதந்திரப் போராட்ட வீரர் சாது சிங் தோமர் சிலையின் மீது ஏறி உடைக்கும் காணொலி சமூக வலைதளங்களில் அதிகம் பரவிவருகிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.