ETV Bharat / state

மதியம் 1 மணி செய்தி சுருக்கம் - Top 10 news @ 1PM - மதியம் 1 மணி செய்தி சுருக்கம்

ஈடிவி பாரத்தின் மதியம் 1 மணி செய்தி சுருக்கம்

மதியம் 1 மணி செய்தி சுருக்கம்
மதியம் 1 மணி செய்தி சுருக்கம்
author img

By

Published : May 13, 2021, 1:01 PM IST

அதிமுக எம்பிக்கள் ராஜினாமா ஏற்பு!

அதிமுகவைச் சேர்ந்த ஆர்.வைத்தியலிங்கம், கே.பி.முனுசாமி ஆகிய இருவரும் மாநிலங்களவை உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டு, அப்பதவியை வகித்து வந்தனர். அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவ்விருவரும், தங்களது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாகக் கடிதம் அளித்தனர். இவற்றை மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு ஏற்றுக் கொண்டார். இதையடுத்து அந்த இடங்கள் காலியானதாக அறிவிக்கப்பட்டது.

ரமலான் பண்டிகை: வைகோ, ராமதாஸ் வாழ்த்து!

சென்னை: ரமலான் திருநாளை முன்னிட்டு, இஸ்லாமியர்களுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மக்கள் பணம் மக்களுக்காக - கரோனா நிவாரண நிதிக்கு ரூ. 33 ஆயிரம் அளித்த மாணவர்

சென்னை: தமிழ் முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணவரான றாம் சந்தோஷ் என்பவர் தனது உதவித் தொகை 33 ஆயிரம் ரூபாயை, முதலமைச்சரின் கரோனா பொது நிவாரண நிதிக்கு அளித்துள்ளது சமூக வலைதளங்களில் பேசு பொருளாகியுள்ளது.

வேட்டையாடப்பட்ட தமிழர்களுக்கு வீட்டில் இருந்தே வீர வணக்கம் செலுத்துவோம்!

சென்னை: மே 17ஆம் நாள், முள்ளிவாய்க்காலில் வேட்டை ஆடப்பட்ட தமிழ் இனக் கொழுந்துகளுக்கு வீட்டில் இருந்தே வீர வணக்கம் செலுத்துவோம் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

கரோனா நிவாரண நிதி: ஒருநாள் ஊதியத்தை வழங்கும் தலைமைச் செயலக பணியாளர்கள்!

சென்னை: கரோனா நிவாரண நிதிக்காக தங்களின் ஒரு நாள் ஊதியத்தை வழங்குவதாக தலைமைச் செயலக பணியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

விருதுநகர் அருகே செல்போன் கடையில் 9 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் திருட்டு!

விருதுநகர்: அருப்புக்கோட்டை அருகே செல்போன் கடை ஒன்றில், பூட்டிய கடையில் ஒன்பது செல்போன்கள் திருடு போயிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிங்கப்பூரிலிருந்து 256 காலி ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், கண்டெய்னர்கள் வருகை!

சென்னை: சிங்கப்பூரிலிருந்து இரண்டு இந்திய விமானப்படை விமானங்களில், 256 காலி ஆக்ஸிஜன் சிலிண்டா்கள், கண்டெய்னா்கள் சென்னை விமான நிலையம் வந்தடைந்தன.

கரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்களை எரியூட்ட வரிசையில் காத்திருக்கும் ஆம்புலன்ஸ்கள்!

சென்னை: கரோனா தொற்றால் அதிகரித்து வரும் உயிரிழப்புகளால், இறந்தவர்களின் சடலங்களை எரியூட்ட உடல்களைக் கொண்டுவரும் ஆம்புலன்ஸ்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

மாநிலத்திற்கு 1.5 கோடி டோஸ் கோவிஷீல்ட் ரெடி : அமைச்சர் டோபே

சீரம் இந்தியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் அடார் பூனவல்லா, மகாராஷ்டிரா மாநிலத்திற்கு மே மாதம் 20ஆம் தேதிக்கு பிறகு 1.5 கோடி டோஸ் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் தருவதாக உறுதியளித்துள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ராஜேஷ் டோபே தெரிவித்துள்ளார்.

மின்னல் தாக்கி 13 பேர் உயிரிழந்த பரிதாபம்!

பிகாரில் மின்னல் தாக்கி 13 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்திய வானிலை ஆய்வு மையம், மாநிலத்தில் இடியுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்பிருப்பதாக எச்சரித்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.