ஒற்றைத் தலைமையில் அதிமுக அரசு செயல்பட வேண்டும் என்று மதுரை வடக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ராஜன் செல்லப்பா கருத்து தெரிவித்திருந்தார்.
இது பூதாகரமாக வெடித்துக் கொண்டிருக்க அதிமுகவில் இரட்டை தலைமைக்குள் இருந்த பிரச்னை காரணமாகத்தான் மத்திய அமைச்சரவையில் அதிமுகவிற்கு இடம் கிடைக்கவில்லை என குன்னம் தொகுதி எம்எல்ஏ ராமச்சந்திரன் கருத்து தெரிவித்திருந்தார். இது அதிமுக கட்சிக்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அதிமுகவின் ஆலோசனைக் கூட்டம் நாளை சென்னையில் நடைபெறும் என அதிமுக அறிவித்துள்ளது. இதில் பங்கேற்க மாவட்டச் செயலாளர்கள், மக்களவை உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.