ETV Bharat / state

சென்னை மாநகராட்சி எல்லைக்குள் சுங்கக் கட்டணம்: போராட்டத்தை அறிவித்த திமுக

author img

By

Published : Dec 10, 2020, 2:26 PM IST

Updated : Dec 10, 2020, 6:26 PM IST

சென்னை மாநகராட்சி எல்லைக்குள்பட்ட பகுதிகளில் சுங்க கட்டணம் வசூலிப்பதைக் கண்டித்து திமுக சார்பில் நாளை மாபெரும் ஆர்பாட்டம் நடைபெறும் என திமுக சட்டப்பேரவை உறுப்பினர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

toll charges within the limits of Chennai Corporation: DMK announces protest

சென்னை: சைதாப்பேட்டையில் உள்ள திமுக தென்சென்னை மாவட்ட தலைமை அலுவலகத்தில் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, "அரசுப் பணத்தில் சென்னை மாநகராட்சி உணவு வழங்கும் என அறிவித்துவிட்டு, அதனை அதிமுக நிர்வாகிகள் மூலம் செயல்படுத்திவருகிறது. இது ஒரு மிகப்பெரிய முறைகேடு. இதுகுறித்து மாநகராட்சி ஆணையரிடம் தொலைபேசி மூலம் தெரிவித்தும் தற்போதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ம.சுப்பிரமணியன்

மதுரவாயல் - சோழிங்கநல்லூர் சாலை மிக மோசமாக உள்ளபோதும், அங்கு சுங்க கட்டணம் வசூல் செய்வது நிறுத்தப்படவில்லை. மாநகராட்சி எல்லையின் உள்ளேயே ஒன்பது இடங்களில் சுங்கச்சாவடி மூலம் கட்டணம் வசூலிப்பது மக்களை சுரண்டும் செயலாகத் தெரிகிறது.

இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியன் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் முறையிட்டபோது, அவை மாநகராட்சியின் எல்லைக்கு உள்பட்டது எனவே இதுதொடர்பான புகார்களை தமிழ்நாடு முதலமைச்சரிடம் தெரிவிக்குமாறு கூறியுள்ளார். இதுதொடர்பான வாதங்களை சட்டப்பேரவையில், சட்டப்பேரவை உறுப்பினர் ரமேஷ் எழுப்பியுள்ளார். இருப்பினும் தமிழ்நாடு அரசு எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

மாநகராட்சி குறித்து மா.சுப்ரமணியன்

அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து திமுக சார்பாக சோழிங்கநல்லூர் சுங்கச்சாவடி அருகே நாளை (டிச. 11) காலை 10 மணி அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். இதில் சுமார் 50 ஆயிரம் பேர் வரை பங்கேற்பார்கள். திமுக சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி மற்றும் திமுகவின் அமைப்புச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ். பாரதி ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்" என்றார்.

2ஜி வழக்கு ஊழல் புகார் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், "2ஜி வழக்கு குறித்து ஆ. ராசா முன்னதாகவே விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக நேரடியாக விவாதிக்க இயலாமல் முதலமைச்சர் தொடர்ந்து கருத்துகளை மட்டும் தெரிவித்துவருகிறார். அடிப்படை உறுப்பினராக இருக்கக்கூட தகுதி இல்லாதவர் முதலமைச்சராக உள்ளார்" எனக் குற்றம் சாட்டினார்.

இதையும் படிங்க: விவசாயிகள் போராட்டத்தால் அரசிற்கு வருவாய் இழப்பு

Last Updated : Dec 10, 2020, 6:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.