ETV Bharat / state

சென்னை விமான நிலையத்தில் இருசக்கர வாகனங்களுக்கும் டோக்கன் முறையில் கட்டண வசூல்! - சென்னை விமான நிலைய நவீன பார்க்கிங் வசதி

சென்னை விமான நிலையத்தில் டோல்கேட் அமைக்கப்பட்டு கார்களுக்கு டோக்கன் முறையில் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அனைத்து இரு சக்கர வாகனங்களுக்கும் இந்த டோக்கன் முறையில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

airport
சென்னை
author img

By

Published : Apr 23, 2023, 9:13 PM IST

சென்னை: சென்னை விமான நிலையத்தில் ஆறு அடுக்குகள் கொண்ட நவீன கார் பார்க்கிங் வசதி கடந்த ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி செயல்பாட்டு வந்தது. சென்னை விமான நிலைய வளாகத்திற்குள் கிழக்கு, மேற்கு என்று இரு பிரிவுகளாக அமைக்கப்பட்டுள்ள இந்த 'மல்டி டெவல் கார் பார்க்கிங்'-ல் 2,150 கார்கள், 400 இருசக்கர வாகனங்கள் நிறுத்த முடியும்.

இந்த பார்க்கிங்கிற்கு கட்டணம் வசூலிப்பதற்காக, விமான நிலைய வளாகத்துக்குள் நுழையும் இடத்தில் டோல்கேட் அமைக்கப்பட்டு உள்ளே வரும் கார்கள் ஸ்கேன் செய்யப்பட்டு டோக்கன் கொடுக்கும் முறை கடந்த ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி முதல் அமலில் உள்ளது. அந்த டோக்கனில் வாகனத்தின் எண், உள்ளே நுழையும் நேரம் ஆகியவை குறிப்பிடப்பட்டிருக்கும். கார்கள் வெளியில் செல்லும்போது, அங்கு அமைக்கப்பட்டுள்ள டோல்கேட்டில் அந்த டோக்கனை பார்த்து, எவ்வளவு நேரம் வாகனம் விமான நிலையத்திற்குள் நின்றதோ, அதற்கு தகுந்தாற்போல் கட்டணங்களை வசூல் செய்து விட்டு வாகனங்களை அனுப்புவார்கள்.

அதே நேரத்தில் இருசக்கர வாகனங்கள், உள்ளே நுழையும் போது டோக்கன் வாங்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் நேரடியாக உள்ளே சென்று விட்டு பார்க்கிங்கில் நிறுத்திக் கொள்ளலாம். வெளியே செல்லும்போது அப்பகுதியில் நிற்கும் பார்க்கிங் ஊழியர், இருசக்கர வாகனங்களிடம், கட்டணங்களை வசூலித்துக் கொள்வார்கள்.

இந்த நிலையில், சென்னை விமான நிலையத்திற்குள் நுழையும் இருசக்கர வாகனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, அனைத்து இரு சக்கர வாகனங்களும் டோல்கேட்டில் இருசக்கர வாகனங்கள் செல்வதற்கு என்று தனியாக அமைக்கப்பட்டுள்ள வழியில்தான் செல்ல வேண்டும் என்றும், அங்கு பணியில் இருக்கும் டோல்கேட் ஊழியர் இருசக்கர வாகனத்தின் நம்பர் பிளேட்டை ஸ்கேன் செய்து, டோக்கன் வழங்கிய பிறகே உள்ளே செல்ல முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருசக்கர வாகனங்களுக்கு முதல் ஒரு மணி நேரத்திற்கு 20 ரூபாயும், 10 மணி நேரத்தில் இருந்து 24 மணி நேரம் வரையில் 90 ரூபாய் வரையிலும் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும், இதில் காவல்துறை, மத்திய தொழிற் பாதுகாப்பு படையினர், விமான நிலைய ஊழியர்கள், பத்திரிகையாளர்கள், அரசு துறையை சார்ந்தவர்கள் யாருக்கும் விதிவிலக்கு இல்லை - அனைவரும் கட்டணம் செலுத்த வேண்டும். டோக்கனை தவற விட்டவர்களுக்கு வெளியேறும்போது, 150 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டண முறை கடந்த 21ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

இது குறித்து சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறும்போது, "பார்க்கிங் பராமரிப்பு நிர்வாகத்தை தனியார் ஒப்பந்ததாரரிடம் ஒப்படைத்து விட்டோம். அவர்களிடம் ஒப்படைக்கும் போது பார்க்கிங் கட்டணம் எவ்வளவு வசூலிக்க வேண்டும் என்பதையும் வரையறை செய்து கொடுத்திருக்கிறோம். அதில் இருசக்கர வாகனங்களுக்கும் பார்க்கிங் கட்டணம் உள்ளது. எனவே அதில் குறிப்பிடப்பட்ட பார்க்கிங் கட்டணத்துக்கு அதிகமாக கட்டணம் வசூலித்தால் மட்டுமே நாங்கள் தலையிட முடியும்" என்றனர்.

இதையும் படிங்க: "திமுக சொத்து பட்டியல் என நேரத்தை வீணடிக்கும் அண்ணாமலை" - வேல்முருகன் விமர்சனம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.