1.தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து? முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று ஆலோசனை
![முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/11984246_stalin.png)
தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு தேர்வு நடத்துவது குறித்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (ஜூன் 2) ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
2.தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்ப்பு
![தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்ப்பு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/11984246_mazhai.png)
தமிழ்நாட்டில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று (ஜூன் 2) இடியுடன்கூடிய பலத்த மழை பெய்யக் கூடும்.
3.இங்கிலாந்து-நியூசிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் லார்ட்சில் இன்று தொடக்கம்
![இங்கிலாந்து, நியூசிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் லார்ட்சில் இன்று தொடக்கம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/11984246_sports.png)
இங்கிலாந்து சென்றுள்ள கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதன்படி இங்கிலாந்து-நியூசிலாந்து மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்சில் இன்று தொடங்குகிறது.
4.இளையராஜா, மணிரத்னத்துக்கு இன்று பிறந்தநாள்
![இளையராஜா, மணிரத்னத்துக்கு இன்று பிறந்தநாள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/11984246_ilayarajamaniratnam.png)
தமிழ்த் திரையுலகின் மாபெரும் கலைஞர்களான இசையமைப்பாளர் இளையராஜா, இயக்குனர் மணிரத்னம் ஆகியோர் இன்று (ஜூன் 2) பிறந்தநாள் காண்கின்றனர்.