ETV Bharat / state

தமிழகத்தில் 15 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்பு! - TN Rain

TN Rain Report: தமிழகத்தில் கோவை, திருச்சி, மதுரை, நாமக்கல் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் அடுத்த சில நாட்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

வானிலை மையம் தகவல்
15 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்பு.
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 7, 2023, 2:03 PM IST

சென்னை: காற்றின் திசையின் காரணமாக தமிழகத்தில் கோவை, திருச்சி, மதுரை, நாமக்கல் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் அடுத்த சில நாட்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. மேலும், ஒரு சில இடங்களில் இடி மின்னல் உடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும், இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு (அக்டோபர் 8,9) கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், திண்டுக்கல், மதுரை மற்றும் தேனி என ஆகிய 13 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

இதேபோல், அக்டோபர் 10ஆம் தேதி மற்றும் 11ஆம் தேதி, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மற்றும் தேனி 15 மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

பதிவான மழை அளவு: தேனாம்பேட்டை (சென்னை), கோடம்பாக்கம் (சென்னை), பெருங்குடி (சென்னை) தலா 4செ.மீ மழை பதிவாகி உள்ளது, நாமக்கல் 3தலா 4செ.மீ மழை பதிவாகி உள்ளது, நாமக்கல் ஆட்சியர் அலுவலகம், மண்டலம் 12 ஆலந்தூர் (சென்னை), எம் ஜி ஆர் நகர் (சென்னை), தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி) தலா 2தலா 4செ.மீ மழை பதிவாகி உள்ளது, சென்னை நுங்கம்பாக்கம், தாம்பரம் (செங்கல்பட்டு), அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை), அடையார் (சென்னை), மாரண்டஹள்ளி (தருமபுரி) தலா 1தலா 4செ.மீ மழை பதிவாகி உள்ளது” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: விபத்தில் உயிரிழந்தவரின் உடலை மீட்க வந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் உயிரிழப்பு.. நெல்லையில் சோகம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.