சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அண்மைக் காலமாக காலை நேரத்தில் வெயிலும் மாலை நேரத்தில் மழையும் மாறி மாறி பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்து இரண்டு நாட்களுக்கு மிதமான மழை முதல் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும், காற்று திசை மற்றும் வெப்ப சலனம் காரணமாகவும் தற்போது மழையானது பெய்தது. அதன்படி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று (செப். 23) இரவு 8 முதலே ஒரு சில இடங்களில் கனமழையும் ஒரு சில இடங்களில் மிதமான மழையும் பெய்தது.
சென்னை நகரம் அதன் புறநகரிலும் மழையானது விட்டு விட்டு பெய்தது. மேலும் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்தது. முதலில், சென்னையில் புறநகர் பகுதிகளான மதுரவாயல், திருவேற்காடு, பாடி, அம்பத்தூர், ஆவடி ஆகிய இடங்களில் மாலை 7 மணி முதல் தொடர் சாரல் மழை பெய்தது.
முதலில் சென்னையின் புறநகர் பகுதியில் பெய்த மழை, படிப்படியாக சென்னை நகருக்குள் நுழைந்து, ஆலந்தூர், கிண்டி, சைதாப்பேட்டை, நந்தனம், நுங்கம்பாக்கம், அண்ணாசாலை, மயிலாப்பூர் தியாகராய நகர் உள்ளிட்ட இடங்களில் கொட்டித் தீர்த்தது.
போக்குவரத்து நெரிசல் : சுமார் ஒரு மணி நேரம் மழை பெய்ததால் ஜிஎஸ்டி சாலை உள் வட்டசாலை, 100 அடி சாலை, அண்ணா சாலை, காமராஜர் சாலை, ஓஎம்ஆர், ஈசிஆர், நெல்சன் மாணிக்கம் சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, அம்பத்தூர் ஆகிய இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் மாலையில் அலுவலகங்களில் இருந்து வீடு திரும்புவோர் உள்ளிட்டோர் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
சென்னையை குளிர்வித்த மழை: கடந்த இரண்டு நாட்களாக காலையில் வெயில் சுட்டெரித்த நிலையில் மாலை 7 மணிக்கு மேல் சென்னை மினி கொடைக்கானலாக மாறும் நிலை ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, பல்வேறு இடங்களில் மழை பெய்ததால் தற்போது இதனமான சூழலாக இருந்து வருகிறது.
வானிலை மையம்: "தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்து உள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று (செப்.23) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்து உள்ளது. மேலும் அடுத்த 3 நாட்களுக்கு தமிழ்நாடு, புத்ச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கன மழைக்கு வாய்பு உள்ளாதாகவும் வானிலை மையம் எச்சரித்து உள்ளது.
இதையும் படிங்க: அண்ணாமலையை நீக்க வேண்டும்..! அதிமுக போட்ட கண்டிஷன்..! பாஜகவின் ரியாக்ஷன் என்ன..?