ETV Bharat / state

நெருக்கமானவர்களிடம் மனம் விட்டு பேசக்கூடிய வாய்ப்புள்ள ராசிக்காரர்களே..! மகிழ்ச்சி காத்திருக்கு.. - தின பலன்

Today Rasipalan in tamil: ஜனவரி 8ம் தேதியான இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளின் பலன்களைக் காணலாம்.

Today Rasipalan in tamil
இன்றைய ராசிபலன் தமிழில்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 8, 2024, 6:50 AM IST

மேஷம்: எந்த ஒரு செயலையும் செய்வதற்கு முன்னால் கவனித்து, சிந்தித்து செயல்பட வேண்டும். ஏனெனில் அவசர முடிவுகள், நீண்டகாலமாக கடும் உழைப்பினால் ஏற்பட்ட முன்னேற்றத்தை பெரிதும் பாதிக்கும். காலை பதற்றத்துடன் தொடங்கினாலும், மாலையில் குழந்தைகளுடன் நேரத்தைக் கழிப்பீர்கள்.

ரிஷபம்: தொடர்ந்து துன்புறுத்தல் கொடுத்து வந்த ஒருவரை சந்திக்க நேரிடலாம். உங்களது வருங்கால நலனை கருத்தில் கொண்டு, அவரை கண்டு கொள்ளாமல் அமைதியாக இருப்பது நல்லது. உங்களது வளமையான எதிர்காலத்தை பாதிக்காத வண்ணம் எதிர்வினை ஆற்றவும்.

மிதுனம்: மேலதிகாரிகள் உங்களுக்கு புதிய பொறுப்புகளை வழங்குவார்கள். பகல் நேரத்தில் வேலை அதிகம் இருந்தாலும், மாலையில் உங்களது திறமையான பணியின் காரணமாக பெற்ற வெற்றியை கொண்டாடும் வாய்ப்புள்ளது. ஏலம் தொடர்பான விஷயங்களில் தற்போது முடிவெடுக்காமல் சிறிது ஒத்திப் போடுவது நல்லது.

கடகம்: தயக்கம் ஏதும் இல்லாமல் செயல்படுவீர்கள். உங்களுக்கு இருக்கும் எதிர்மறையான எண்ணங்களையும், நம்பிக்கைகளையும் விட்டு விட்டு, பொறுப்புகள் அனைத்தையும் எடுத்துக் கொள்ளவும். பாதிப்புகளைப் பற்றி அதிகம் கவலைப்படாமல், உங்கள் பணியை தொடரவும்.

சிம்மம்: அலுவலகத்தில் பதவி உயர்வை அடைய வேலையின் மீதும், வேலைகளை செயல்படுத்தும் உத்தியின் மீதும் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். கூடுதல் வேலைகளையும் மேற்கொள்வீர்கள். இதற்கான பலன்கள் உடனடியாக கிடைக்காவிட்டாலும், வருங்காலத்தில் இதற்கான பலன்களை நிச்சயமாக எதிர்பார்க்கலாம். தனிப்பட்ட உறவுகளைப் பொறுத்தவரை, குறிப்பிட்டு சொல்லும்படியான விஷயங்கள் எதுவும் நடைபெறும் வாய்ப்பில்லை.

கன்னி: குறிக்கோள்கள் மற்றும் அதிக அளவிலான வேலைகளை எடுத்துக் கொள்வதற்கான உங்களது ஆர்வம் ஆகியவை அதிகம் இருக்கும். கடும் உழைப்பிற்குப் பிறகு புத்துணர்ச்சி பெற, தனிப்பட்ட விருந்து, சமூக நிகழ்ச்சிகள் அல்லது திருமண விருந்து ஆகியவற்றில் கலந்து கொண்டு மகிழ்ச்சியாக இருக்கலாம்.

துலாம்: வாய்ப்புகளை தவற விடக்கூடாது என்ற உங்கள் இயல்பின் காரணமாக, சிறந்த வகையில் பலனடைவீர்கள். உயரதிகாரிகள் உங்களது திறமை மற்றும் செயலாற்றலைப் பார்த்து மகிழ்ச்சி அடைவார்கள். அவர்கள் உங்களுக்கு பதவி உயர்வு தரும் வாய்ப்பு உள்ளது. யாருடனும் நேரடியாக முதல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது நல்லதல்ல. ஏனென்றால் இது பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும்.

விருச்சிகம்: உணர்வுகளை வெளிப்படுத்துவது, மிகவும் முக்கியமாகும். நெருக்கமானவர்களுடன், உங்கள் மனதில் இருப்பவற்றை பகிர்ந்து கொள்வீர்கள். இது ஒரு வரவேற்கத்தக்க தன்மையாகும். உங்கள் இதயத்தில் உணர்ச்சிகள் அதிகம் இருந்தாலும், பொது இடத்தில் பலர் பார்க்கும் வண்ணம் உங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்தக் கூடாது.

தனுசு: ஏதோ ஒரு விஷயத்தில் சிக்கிக் கொண்டதைப் போன்ற உணர்வு இருக்கக்கூடும். ஒரே விதமான பணிகளினால் உற்சாகம் இல்லாமல் இருக்கும். கிரக நிலைகளும் மந்தமாக இருப்பதால், இன்று நீங்கள் குதூகலிக்கும் வகையிலான விஷயங்கள் நடக்கும் வாய்ப்பு மிகவும் குறைவு. அதனால் பொறுமையாக இருந்து, நாளை சிறந்த வகையில் துவங்கும் என்று நம்பிக்கை வைக்கவும்.

மகரம்: நல்ல நாளின் தொடக்கம் சிறந்த வகையில் இருக்கும். வாழ்க்கையில் நேர்மறையான அணுகுமுறையுடன் இன்றைய தினத்தை தொடங்குவதால், இது ஒரு சிறந்த நாளாக இருக்கும். உங்களது அர்ப்பணிப்பு மற்றும் உறுதியான மனப்பான்மை, மற்றவர்களிடமிருந்து உங்களை உயர்வாக காட்டுகிறது என்பதில் சந்தேகம் இல்லை. வாழ்க்கைத் துணையுடன், சச்சரவு ஏதேனும் ஏற்பட்டிருந்தால், அந்த மனக்கசப்பு நீங்கும் வாய்ப்புள்ளது. திருமண வாழ்க்கை சந்தோஷம் நிறைந்ததாக இருக்கும்.

கும்பம்: நிதி நிலைமை மற்றும் வருமானம் தொடர்பான எண்ணங்கள் அல்லது கவலைகள், உங்கள் மனதில் இன்று முழுவதும் இருக்கும். மாலையில் நண்பர்களுடன் சந்தோஷமாக நேரத்தைக் கழிக்கும் வாய்ப்புள்ளது. நண்பர்களை, நீங்கள் ஒதுக்கியதில்லை என்றாலும், இன்று நண்பர்களின் முக்கியத்துவத்தை முற்றிலுமாக உணரும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

மீனம்: மனதில் உள்ளவற்றை நெருக்கமானவர்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புவீர்கள். உங்களது சிறந்த தொடர்பு திறன் காரணமாக, அறிவார்ந்த மக்கள் உங்கள் மீது ஈர்ப்பு கொள்வார்கள். சிறந்த கல்வியாளர்கள் மற்றும் முன்னேற்றமடைந்த மக்களுடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கும். இது பணியில் நீங்கள் உயர்வதற்கு மிகவும் உதவியாக இருக்கும்.

இதையும் படிங்க: வார ராசிபலன்: காதலில் வெற்றி காண உள்ள ராசிக்காரர் யார்..?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.