சென்னை: சர்வதேச சந்தையில் ஏற்பட்டு வரும் மாற்றங்களால் தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. இந்நிலையில், சென்னையில், தங்கம் விலை சவரனுக்கு 40 ரூபாய் குறைந்துள்ளது. சர்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, சர்வதேச வங்கிகளின் நிலைப்பாடு, முதலீட்டாளர்களின் முதலீடுகள், சர்வதேச அரசியல் சூழ்நிலை, உலகளாவிய சம்பவங்கள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தினமும் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
மேலும் தற்போதைய சூழ்நிலையில், உலக முதலீட்டாளர்கள் டாலரில் முதலீடு செய்வது அதிகமாக இருப்பதால் தங்கத்தின் விலையானது, தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. கடந்த 14 நாட்களில் தங்கம் சவரனுக்கு ரூ.2,120 வரை குறைந்துள்ளது.
இந்நிலையில், சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று (அக்.4) கிராமுக்கு ரூ.5 குறைந்து, ரூ.5,285-க்கும், சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.42,280க்கும் விற்பனையாகிறது. மேலும், ஒரு கிராம் வெள்ளி 40 காசுகள் குறைந்து, ரூ.73.10க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.400 குறைந்து ரூ.73,100க்கும் விற்பனையாகிறது.
இதையும் படிங்க: அதிரடி சரிவை சந்தித்த தங்கம்.. இன்றைய தங்கம் விலை என்ன தெரியுமா?
இன்றைய நிலவரம்: (அக்.4)
- 1 கிராம் தங்கம் (22கேரட்) - ரூ.5,285
- 1 சவரன் தங்கம் (22கேரட்) - ரூ.43,280
- 1 கிராம் தங்கம் (24-கேரட்) - ரூ.5,755
- 8 கிராம் தங்கம் (24-கேரட்) - ரூ.46,040
- 1 கிராம் வெள்ளி - ரூ.73.10
- 1 கிலோ வெள்ளி - ரூ.73,100
இதையும் படிங்க: கடந்த 500 நாட்களாக விலையில் மாற்றமின்றி பயணிக்கும் பெட்ரோல், டீசல் - காரணம் என்ன?