சென்னை: தங்கத்தின் விலையானது சர்வதேச பொருளாதாரச் சூழலின் மத்தியில், கமாடிட்டி மார்க்கெட்டைப் பொறுத்து நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அது மட்டுமின்றி, சர்வதேச வங்கி, சர்வதேச அரசியல் சூழல், அமெரிக்க வங்கிகளின் வட்டி விகிதம் என பல்வேறு காரணங்களை முன்வைத்து தான் தங்கத்தின் விலையில் தினமும் ஏற்றம், இறக்கம் காணப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது. மேலும், சர்வதேச அளவில் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளதால், உள்நாட்டிலும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. தற்போது சர்வதேசச் சந்தையில் அவுன்ஸ் ஒன்றுக்கு 2 ஆயிரம் டாலர்களுக்கு மேல் தங்கம் விற்பனையாகி வருவதாலும், உள்நாட்டில் தங்கத்தின் விலை உயரத் துவங்கியுள்ளது.
கிட்டத்தட்ட ஒரு சவரன் தங்கத்தின் விலை 47 ஆயிரத்தைக் கடந்துள்ளதால், நகை முதலீட்டாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். சென்னையில் டிசம்பர் 2ஆம் தேதி 47 ஆயிரத்து 320 ரூபாய்க்கு தங்கம் விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று தங்கத்தின் விலை மேலும் உயர்ந்துள்ளது.
இன்று (டிச.4) 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.5975க்கும், ஒரு சவரன் ரூ.47,800க்கும் விற்பனையாகி வருகிறது. இதேபோல், வெள்ளி ஒரு கிராம் ரூ.83.50 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இன்றைய விலை நிலவரம் (டி.4):
- 1 கிராம் தங்கம் (22கேரட்) - ரூ.5,975
- 1 சவரன் தங்கம் (22கேரட்) - ரூ.47,800
- 1 கிராம் வெள்ளி - ரூ.83.50
இதையும் படிங்க: வரலாறு காணாத அளவு உச்சம் தொட்ட தங்கத்தின் விலை!