சென்னை: சென்னையில் இன்று (ஆக.29) 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 160 உயர்ந்து, 44,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்று தங்கத்தின் விலையில் மாற்றமின்றி விற்பனையான நிலையில், இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்திருப்பது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. இதனால் தங்கத்தின் விலை தினமும் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. மேலும், சென்னையில் கடந்த சில மாதங்களாகவே தங்கத்தின் விலை ஏற்றம், இறக்கமாகவே இருந்து வருகிறது.
அமெரிக்காவின் வங்கிகள் திவாலான நிலையில் பெடரல் வங்கி வட்டி விகிதத்தை உயத்தி வருகிறது. அமெரிக்காவில் பணவீக்கத்தை கட்டுபடுத்த இதுவும் ஒரு காரணமாக அமைய, இதனால் உலகம் முழுவதும் அமெரிக்க டாலர் நிகரில் தங்கம் விலை ஏற்றம், இறக்கம் அடைந்து வருகிறது.
இதன் காரணமாக, இந்த மாதத்தொடக்கத்தில் இந்திய சந்தையில் தங்கத்தின் விலை சுமார் 1.5% முதல் 2% வரை குறைந்து இருந்தது. மேலும், கடந்த மே மாதத்தில் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை அடைந்திருந்தது. அதனுடன் ஓப்பிடுகையில், இம்மாதத்தில் தங்கத்தின் விலை மே மாதத்தை விட சுமார் 5% வரை குறைந்து உள்ளது. இந்த நிலையில், தங்கத்தின் விலை ஆகஸ்ட் மாதம் இரண்டாம் வாரத்தில் இருந்து பெரிதும் மாற்றமின்றி விற்பனை ஆகிவந்த நிலையில், தங்கத்தின் விலை தற்போது அதிகரித்தது உள்ளது.
44 ஆயிரத்தை தொட்ட தங்கம் விலை: மே மாத தொடக்கத்தில் தங்கத்தின் விலை அதிகபட்சமாக, ரூ.45 ஆயிரத்திற்கு மேல் விற்பனை செய்யபட்டது. அமெரிக்காவில் நிலவிய பொருளாதார சூழல், தொடர்ந்து திவாலான வங்கிகள் என பல்வேறு காரணங்களால், உலக முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது அதிக முதலீடு செய்யத் தொடங்கினார்கள்.
அதைத் தொடர்ந்து, தங்கத்தின் விலையானது ஏழைகளுக்கு எட்டாக் கனியாக மாறியிருந்தது. கடந்த வாரத்தில் தங்கத்தின் விலையானது இறங்குமுகமாக இருந்து வந்த நிலையில், மீண்டும் இன்று (ஆக.29) தங்கத்தின் விலை ரூ. 44 ஆயிரத்தைத் தொட்டுள்ளது.
இன்றைய நிலவரம்: சென்னையில் 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று (ஆக.29) ரூ.160 உயர்ந்து ரூ.44,000-க்கும், ஒரு கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.5,500-க்கும் விற்பனை செய்யப்படுகின்றன. அதேபோல, வெள்ளி விலை கிராமுக்கு 20 காசுகள் உயர்ந்து ரூ.80.20-க்கும், ஒருகிலோ வெள்ளி ரூ.80,200-க்கும் விற்பனை ஆகின்றன.
இனி தங்கத்தின் விலை: தொடர்ந்து சர்வதேச பொருளாதர சுழலில், மத்தியில் இரண்டு வாரங்களாக தங்கம் விலை அதிகரித்து, தற்போது தங்கத்தின் விலை சர்வதேச கமாடிட்டி மார்க்கெட்டை பொருத்து இருக்கிறது. இது வரவிருக்கும் நாள்களிலும் தொடருமா? இல்லை மீண்டும் தங்கத்தின் விலை உயருமா? என்று பொருத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.
இதையும் படிங்க: Senthil Balaji : ஜாமீன் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி மனுத் தாக்கல்!