சென்னை: கரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு முதல் பல மாதங்கள் தொடர்ந்து பூங்கா மூடப்பட்டிருந்ததால் அதிகளவில் வருவாய் இழப்பு மற்றும் வனவிலங்குகளுக்கு உணவு வழங்குவது மற்றும் பராமரிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வனவிலங்குகளின் உணவு, பராமரிப்பு மற்றும் இதர செலவுகள் என மாதத்திற்கு குறைந்தபட்சம் ரூ.1 கோடியே 28 லட்சம் ஆகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வனவிலங்குகளைப் பராமரிக்க நிதி ஒதுக்குமாறு முதன்மை வனப்பாதுகாவலர் அரசிற்கு கோரிக்கை விடுத்திருந்தார். இதைப் பரிசீலித்து, உடனடியாக வனவிலங்குகளின் உணவு மற்றும் பராமரிப்பு செலவுகளுக்காக 6 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: நடிகர் சிம்பு தாக்கல் செய்த வழக்கு : தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு 1 லட்சம் அபராதம்