ETV Bharat / state

இலங்கை குண்டுவெடிப்பைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்! - Srilankan terror attack and ISIS

சென்னை: இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களை கண்டித்து, சென்னையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை
author img

By

Published : May 4, 2019, 1:19 AM IST

இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களால் 250 க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர், சென்னை சேப்பாக்கத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இலங்கை குண்டுவெடிப்பிற்கு காரணமான ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினரைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் சென்னையில் ஆர்ப்பாட்டம்

இதுகுறித்து பேசிய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் மாநில செயலாளர் அப்துல் பரூக் கூறுகையில், "மனித மிருகங்களாக இருக்கக்கூடியவர்கள்தான் இலங்கையில் தாக்குதல் நடத்தியிருப்பார்கள். அவர்களது உடல் இஸ்லாமிய அடக்க ஸ்தலங்களில் அடக்கம் செய்யப்படாது என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது. இதனை நாங்கள் வரவேற்கிறோம். தமிழ்நாட்டில் ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பை எதிர்த்தும், தீவிரவாதத்தை எதிர்த்தும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு பல பரப்புரைகளை செய்து வருகிறது" என்றார்.

Intro:

Body:Script sent in Mail

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.