சென்னை: தமிழ்நாடு போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்ற அலுவலர்கள் கூட்டமைப்பின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
அதில், “ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டிய நிலையில், 2016ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் 2017ஆம் ஆண்டு டிசம்பர் வரை ஓய்வு பெற்றவர்களுக்கு மட்டும் ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி மாற்றியமைக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்கப்படும் என உத்தரவிட்டது பாரபட்சமானது.
எனவே, ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, 1998 முதல் 2015ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் பணி ஓய்வுபெற்ற போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க உத்தரவிட வேண்டும்” எனக் கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு இன்று (மே 31) உயர் நீதிமன்ற நீதிபதி சரவணன் முன்பு விசாரணைக்கு வந்தது.
இதனையடுத்து நடைபெற்ற விசாரணையின் முடிவில், “கடந்த 2016ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கு மட்டும் ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி ஓய்வூதியம் வழங்குவது பாரபட்சமானது. எனவே, 2016ஆம் ஆண்டிற்கு முன் ஓய்வு பெற்றவர்களுக்கும் ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையின் அடிப்படையில் ஓய்வூதியமும், நிலுவைத் தொகையும் வழங்க வேண்டும்” என உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ’உயர்நீதிமன்ற நீதிபதிகளின் உள்ளாடைகள் காவி நிறம்’ - கேரள பாப்புலர் ஃப்ரண்ட்