ETV Bharat / state

குரூப் 4 தேர்வு முறைகேடு: மேலும் சில அலுவலர்கள் சிக்க வாய்ப்பு - ஓம் காந்தன் கைது செய்யப்பட காரணம்

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 முறைகேட்டில் சிபிசிஐடி கூறிய பல்வேறு தகவல்களில் முக்கியக் குற்றவாளியான தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அலுவலர்களும் சிக்க வாய்ப்புகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.

tnpsc group 4
tnpsc group 4
author img

By

Published : Jan 27, 2020, 12:26 PM IST

Updated : Jan 27, 2020, 2:16 PM IST

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 முறைகேடு தொடர்பாக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தில் பணியாற்றும் ஓம்காந்தன் என்பவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு மையங்களுக்கு தேவையான பொருள்களை அளிக்கவும், விடைத்தாள்களைப் பாதுகாப்பாக கொண்டுசெல்லவும் தேர்வாணையத்திலிருந்து பணியாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். அவ்வாறு நியமனம் செய்யப்பட்ட ஓம்காந்தன், மாணிக்கவேல் ஆகியோருக்கும் ராமேஸ்வரம் மாவட்டத்தில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், சிபிசிஐடி வெளியிட்ட அறிக்கையின்படி, ஒம்காந்தன் மட்டுமே அனைத்து தவறுகளையும் செய்ததாகக் கூறப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் பல்வேறு முரண்பட்ட கருத்துகளும் இடம்பெற்றுள்ளதால் தேர்வர்களிடம் விசாரணை சரியான முறையில் நடைபெறுகிறதா? என்ற சந்தேகம் வலுத்துவருகிறது. குரூப் 4 தேர்வெழுதிய தேர்வர்களின் விடைத்தாள்கள் ஏபிடி பார்சல் லாரியில் ராமநாதபுரத்தில் இரவு 8 மணிக்கு ஏற்றப்பட்டு, சிவகங்கை மாவட்டத்தில் இரவு 9.50 மணிக்கு விடைத்தாள்களைச் சேகரித்துக்கொண்டு சிவகங்கையைத் தாண்டி இரவு 10.30 மணியளவில் இரவு உணவுக்காக அரை மணி நேரம் லாரி நிறுத்தப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

சிவகங்கையிலிருந்து விக்கிரவாண்டிக்கு 7 மணி நேரத்தில் வந்த லாரி, விக்கிரவாண்டியிலிருந்து சென்னை வந்துசேர அதே 7 மணி நேரம் எடுத்துகொண்டதற்கான காரணத்தினை கூறவில்லை. சிவகங்கையைத் தாண்டி லாரி நிறுத்தப்பட்டு, காரில் லாரியை பின்தொடர்ந்துவந்த ஜெயக்குமாரிடம் விடைத்தாள்களை ஓம்காந்தன் ஒப்படைத்தார் என சிபிசிஐடி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 52 தேர்வர்களின் விடைத்தாள்கள் திருத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ளது எனவும் டிஎன்பிஎஸ்சி அறிக்கை கூறுகிறது.

உண்மையில் யார் குற்றவாளி, ஒளிந்திருக்கும் மர்மம் என்ன?

அதன்படி குரூப் 4 தேர்வில் 200 கேள்விகள் கொண்ட ஒரு ஓ.எம்.ஆர். விடைத்தாளை விடைகள் பார்த்து ஒரு நபர் குறித்தால் குறைந்தது 18 மணி நேரம் ஆகும். எனவே காரில் பின்தொடர்ந்துவந்த ஜெயக்குமார் அந்த இரவு நேரத்தில் அத்தனை விடைத்தாள்களைக் குறித்து முடித்திருக்க வாய்ப்பே இல்லை. இந்தப் பணியினை ஜெயக்குமாருடன் மேலும் பலர் சேர்ந்து ஒரு குழுவாக மட்டுமே அதிவிரைவாக விடைகளை குறித்திருக்க முடியும்.

சென்னை முகப்பேரில் வசிக்கும் ஜெயக்குமார், சென்னைவாசியான ஓம்காந்தனை ஏன் பணிசெய்ய விரும்பும் இடமாக ராமநாதபுரம் மாவட்டத்தை தேர்வு செய்ய அறிவுறுத்த வேண்டும். ஏன் தேர்வர்களும் அதே மையத்தை தேர்வுசெய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், கீழக்கரை ஆகிய இடங்களில் ஜெயக்குமாருக்கு உதவுவதற்கு ஆட்களை தயார் செய்துவைக்கும் பணியில் டிஎன்பிஎஸ்சியில் பணியாற்றிய மாணிக்கவேல், ஓம்காந்தன் ஆகியோர் ஈடுபட்டிருக்க வாய்ப்புகள் உள்ளது.

குற்றம்புரிந்தவர்களுக்கு உதவிய நபர்களைப் பற்றி ஒருவார்த்தைகூட குறிப்பிடாமல் அதற்கான முகாந்திரம் இருப்பதாகக் கூட தெரிவிக்காமல் ஓம்காந்தன், ஜெயக்குமார் ஆகியோரது பெயர் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது ஏன்? என்ற கேள்வியும் தற்பொழுது கிளம்பியுள்ளது. இது போன்ற தேர்வர்களின் கேள்விகளுக்கு முழுமையான விடையை சிபிசிஐடி அளிக்க அனைவரையும் கைது செய்ய வேண்டும் என தேர்வர்கள் கருதுகின்றனர்.

இதையும் படிங்க: டிஎன்பிஎஸ்சி முறைகேடு: விழுப்புரத்தில் 10 பேரிடம் ரகசிய விசாரணை!

Intro:

குருப் 4 தேர்வு முறைகேட்டில் டிஎன்பிஎஸ்சி
மேலும் சில அதிகாரிகளும் சிக்க வாய்ப்பு
Body:

குருப் 4 தேர்வு முறைகேட்டில் டிஎன்பிஎஸ்சி
மேலும் சில அதிகாரிகளும் சிக்க வாய்ப்பு

சென்னை,

குருப் 4 முறைகேட்டில் சிபிசிஐடி கூறிய பல்வேறு தகவல்களில் முக்கிய குற்றவாளியான தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரிகளும் சிக்க வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது.

குரூப் 4 முறைகேடு தொடர்பாக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தில் பணியாற்றும் ஓம்காந்தன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இதனையடுத்து சி.பி.சி.ஐ.டி தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் விடைத்தாள்களை கொண்டு வருவதற்கு பொறுப்பாக நியமனம் செய்யப்பட்ட 2 நபர்களில் தட்டச்சர் மாணிக்கவேல் , காவலுக்கு சென்ற காவலர்கள், ஏ.பி.டி.ஓட்டுனர் ஆகியோர் உணவு உட்கொள்ள வைத்து விட்டு முறைகேட்டினை ஒம்காந்தன் செய்ததாக கூறியுள்ளனர். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் விதிகளின் படி , விடைத்தாள் கட்டுகளை கொண்டு வருவதற்கு அந்த வாகனத்தில் வரும் தேர்வாணையத்தின் பணியாளர்கள், காவலர்கள், ஏ.பி.டி.ஓட்டுனர் ஆகிய 3 பேருமே பொறுப்பு என அதன் அதிகாரி தெரிவிக்கிறார்.

மேலும் தேர்வு மையங்களுக்கு தேவையான பொருட்களை அளிக்கவும், விடைத்தாள்களை பாதுகாப்பாக கொண்டு செல்லவும் தேர்வாணையத்தில் இருந்து பணியாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். அவ்வாறு நியமனம் செய்யப்படும் போது அந்த பணியாளர்கள் மீது நம்பிக்கை வைத்து தேர்வாணையம் சூழ்நிலைக்கு ஏற்ப அவர்களுக்கு பணியிடங்களை ஒதுக்கீடு செய்தும் அளிக்கிறது. அதேபோன்று தான் ஒம்காந்தன், மாணிக்கவேல் ஆகியோருக்கும் ராமேஸ்வரம் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் காவல் பணிக்கு நியமனம் செய்யப்பட்ட காவலர்களை அதுபோன்று பணி நியமனம் செய்யப்படுவதில்லை. இந்த நிலையில் சிபிசிஐடி பாதுகாப்பு பணிக்கு சென்ற காவலர்கள் குறித்து எந்தவிதமான தகவல்களும் தெரிவிக்காமலும், அவர்களுக்கு உள்ள பொறுப்பு குறித்து கூறாமலும் உள்ளது சந்தேகத்தினை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய விசாரணையில் இடைத்தரகர்களையும், அவர்களுக்கு உடந்தையாக இருந்த தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரிகளையும் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதால் தான் சிபிசிஐடியிடம் இந்த புகாரை அளித்துள்ளதாக டிஎன்பிஎஸ்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் சிபிசிஐடி வெளியிட்ட ஒம்காந்தன் மட்டுமே அனைத்து தவறுகளையும் செய்தாக கூறப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் பல்வேறு முரண்பட்ட கருத்துகளும் இடம்பெற்றுள்ளதால் தேர்வர்களிடம் விசாரணை சரியான முறையில் நடைபெறுகிறதா? என்ற சந்தேகம் வலுத்து வருகிறது.

குரூப் 4 தேர்வெழுதிய தேர்வர்களின் விடைத்தாள்கள் ஏ.பி.டி. பார்சல் லாரியில்  ராமநாதபுரத்தில் இரவு 8 மணிக்கு ஏற்றப்பட்டு,  சிவகங்கை மாவட்டத்திலும் இரவு  9.50 மணிக்கு  விடைத்தாள்களை  சேகரித்து கொண்டு சிவகங்கையை தாண்டி  இரவு 10.30மணியளவில் இரவு உணவுக்காக அரை மணி நேரம் லாரி நிறுத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

 சிவகங்கையில்  இருந்து விக்கிரவாண்டிக்கு அதிகாலை 5.30மணிக்கு வந்து சேர்ந்துள்ளது. அங்கு தேநீர் அருந்தும் நேரத்தில்  ஜெயக்குமார் விடைத்தாள்களை ஒப்படைத்தாகவும் . அங்கிருந்து புறப்பட்ட லாரி   பிற்பகல் 1.30மணிக்கு சென்னை வந்ததாக கூறுகிறது சி.பி.சி.ஐ.டி  அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தேநீர் அருந்த அரைமணி நேரம் எடுத்துகொண்டு காலை 6 மணிக்கு லாரி புறப்பட்டிருந்தால் கூட விக்கிரவாண்டியில் இருந்து சென்னைக்கு அடுத்த மூன்றரை மணிநேரத்தில் காலை 9.30மணிக்கு வந்து சேர்ந்திருக்கலாம். ஆனால் சி.பி.சி.ஐ.டி அறிக்கை பிற்பகல் 1.30மணி என்கிறது அதாவது விக்கிரவாண்டியில் இருந்து சென்னை வர ஏழரை மணி நேரம் ஆகியுள்ளது..

சிவகங்கையில் இருந்து விக்கிரவாண்டிக்கு  7மணி நேரத்தில் வந்த லாரி, விக்கிரவாண்டியில் இருந்து சென்னை வந்து சேர அதே 7மணி நேரம் எடுத்துகொண்டதற்கான காரணத்தினை கூறவில்லை.

சிவகங்கையை தாண்டி லாரி நிறுத்தப்பட்டு, காரில் லாரியை  பின் தொடர்ந்து வந்த ஜெயக்குமாரிடம்  விடைத்தாள்களை ஓம்காந்தன்  ஒப்படைத்தார்  என சி.பி.சி.ஐ.டி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் 52 தேர்வர்களின் விடைத்தாள்கள் திருத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ளது எனவும்   டி.என்.பி.எஸ்.சி அறிக்கை கூறுகிறது.
அதன் படி குரூப் 4 தேர்வில் 200 கேள்விகள் கொண்ட ஒரு   ஓஎம்ஆர் விடைதாளை விடைகள் பார்த்து ஒரு நபர் குறித்தால் குறைந்தது  18மணி நேரம் கழித்தே விடைகளை குறித்து முடிதிருக்க முடியும்  . எனவே காரில் பிந்தொடர்ந்து வந்த ஜெயக்குமார் அந்த இரவு நேரத்தில் அத்தனை விடைத்தாள்களை குறித்து முடித்திருக்க வாய்ப்பே இல்லை.

இந்தப் பணியினை ஜெயக்குமாருடன் மேலும் பலர் சேர்ந்து ஒரு குழுவாக மட்டுமே அதி விரைவாக  விடைகளை குறித்திருக்க முடியும்.
சென்னை முகப்பேரில் வசிக்கும் ஜெயக்குமார் ஏன் ஓம்காந்தனை பணி செய்ய விரும்பும் இடமாக  ராமநாதபுரம் மாவட்டத்தை தேர்வு செய்ய சொல்ல வேண்டும். ஏன் தேர்வர்களும் அதே மையத்தை தேர்வு செய்ய அறிவுறுத்தப் பட்டுள்ளார்கள், இறந்தவர்களுக்கான ஈம சடங்கு அளிக்கவே மையத்தினை தேர்வு செய்ததாக தேர்வர்கள் கூறவேண்டும்.
ராமநாதபுரம், ராமேஸ்வரம்,கீழக்கரை ஆகிய இடங்களில்  ஜெயக்குமாருக்கு உதவுவதற்கு ஆட்களை தயார் செய்து வைக்கும் பணியில் டிஎன்பிஎஸ்சியில் பணியாற்றிய மாணிக்கவேல், ஒம்காந்தன் ஆகியோர் ஈடுப்பட்டிருக்க வாய்ப்புகள் உள்ளது.
குற்றம் புரிந்தவர்களுக்கு உ தவிய நபர்களைப் பற்றி ஒரு வார்த்தை கூட குறிப்பிடாமல் அதற்கான முகாந்திரம் இருப்பதாக கூட  தெரிவிக்காமல் ஓம்காந்தன் மற்றும் ஜெயக்குமார் ஆகியோரது பெயர் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது ஏன்? என்ற கேள்வியும் தற்பொழுது கிளம்பி உள்ளது இது போன்ற தேர்வர்களின் கேள்விகளுக்கு முழுமையான விடையை சிபிசிஐடி அளிக்க அனைவரையும் கைது செய்ய வேண்டும் என தேர்வர்கள் கருதுகின்றனர்.

Conclusion:
Last Updated : Jan 27, 2020, 2:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.