ETV Bharat / state

டிஎன்பிஎஸ்சி முறைகேடு: குற்றவாளியைப் பிடிக்க ஆந்திராவிற்கு விரைந்த சிபிசிஐடி

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடு விவகாரத்தில் முக்கிய குற்றவாளியான இடைத்தரகர் ஜெயக்குமாரை கைது செய்ய சிபிசிஐடி காவல் துறையினர் ஆந்திராவிற்கு விரைந்துள்ளனர்.

TNPSC Group 4 Issue: CBCID Police Going to Andhra to Arrest the accused

author img

By

Published : Feb 1, 2020, 3:50 PM IST

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் டிஎன்பிஎஸ்சி தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் முறைகேடு நடந்ததாக ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து புகார்கள் எழுந்த வண்ணம் இருந்த நிலையில், டிஎன்பிஎஸ்சி அலுவலர்கள் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டார்கள்.

அந்த விசாரணையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் அதிகப்படியான மதிப்பெண்கள் பெற்றுள்ளது தெரியவந்தது.

அதனைத்தொடர்ந்து டிஎன்பிஎஸ்சி அலுவலர்கள், 99 தேர்வர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டன. அந்த நடவடிக்கையில் அவர்கள் வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத முடியாத அளவிற்கு தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த வழக்கானது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு கடந்த 25ஆம் தேதி முதல் சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அதில் முக்கிய குற்றவாளியாக இருந்த இடைத்தரகர் ஜெயக்குமாரை சிபிசிஐடி காவல் துறையினரால் கண்டுபிடிக்க முடியவில்லை. உடனே முகப்பேரில் உள்ள அவரது வீட்டில் நேற்று சிபிசிஐடி காவல் துறையினர் சோதனை நடத்தினர்.

இடைத்தரகர் ஜெயக்குமார் ஏற்கனவே குடும்பத்துடன் தலைமறைவாகியுள்ளதால், அவருடைய வீட்டின் பூட்டை உடைத்து சிபிசிஐடி சோதனை நடத்தியதில் 60க்கும் மேற்பட்ட பேனாக்கள், பெண்ட்டிரைவ், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக சிபிசிஐடி சார்பாக தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து நேற்று ஒரு செய்திக் குறிப்பு வெளியிடப்பட்டது. அதில், இடைத்தரகர் ஜெயக்குமாரின் புகைப்படம் வெளியிட்டு அவரைப்பற்றிய தகவல் கொடுக்கப்பட்டால் தக்க சன்மானம் வழங்கப்படும் என்று சிபிசிஐடி அறிவித்தது.

இந்த நிலையில் ஜெயகுமார் பற்றி அவரது குடும்பத்தாரிடம் நடத்திய விசாரணையில் ஆந்திராவில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சிபிசிஐடி தனிப்படை காவல் துறை ஆந்திராவிற்கு விரைந்து தேடும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.

மேலும் குரூப் 2A தேர்வு முறைகேடு தொடர்பாக சிவகங்கை வேல்முருகனிடம் சிபிசிஐடி காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் 42 பேர் மீது வழக்கு பதிந்திருப்பதாக முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மூளையாக செயல்பட்ட வேல்முருகனின் சகோதரர் ஆயுதப்படை உதவி ஆய்வாளரை சிபிசிஐடி காவல் துறையினர் தீவிரமாக தேடிவருகின்றனர்.

Intro:Body:டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக முக்கிய குற்றவாளியை பிடிக்க ஆந்திராவிற்கு விரைந்த சிபிசிஐடி போலீசார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் டிஎன்பிஎஸ்சி தேர்வு நடைபெற்றது.
இந்த தேர்வில் முறைகேடு நடந்ததாக ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து புகார்கள் எழுந்த வண்ணம் இருந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டார்கள்.

அந்த விசாரணையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் அதிகப்படியான மதிப்பெண்கள் பெற்றுள்ளது தெரியவந்தது.

அதனை தொடர்ந்து டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் 99 தேர்வர்கள் மீது நடவடிக்கை எடுத்தனர். அந்த நடவடிக்கையில் அவர்கள் வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத முடியாத அளவிற்கு தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் இந்த வழக்கானது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு கடந்த 25ஆம் தேதி முதல் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினார்கள். இந்த விசாரணையில் இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அதில் முக்கிய குற்றவாளியாக இருந்த இடைத்தரகர் ஜெயக்குமார் சிபிசிஐடி போலீசாரால் கண்டுபிடிக்கமுடியவில்லை உடனே முகப்பேரில் உள்ள அவரது வீட்டில் நேற்று சிபிசிஐடி போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினார்கள்.

இடைத்தரகர் ஜெயக்குமார் ஏற்கனவே குடும்பத்துடன் தலைமறைவாகி உள்ளதால் அவருடைய வீட்டின் பூட்டை உடைத்து சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தியதில் 60க்கும் மேற்பட்ட பேனாக்கள்,பெண்ட்டிரைவ்,முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்தனர்.

குறிப்பாக நேற்று ஒரு செய்திக் குறிப்பும் வெளியிட்டார்கள் அந்த செய்தி குறிப்பில் ஜெயக்குமார் உடைய புகைப்படமும் வெளியிட்டு அவரைப்பற்றிய தகவல் கொடுக்கப்பட்டால் தக்க சன்மானம் வழங்கப்படும் என்று சிபிசிஐடி போலீசார் செய்திக்குறிப்பில் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் ஜெயகுமார் பற்றி அவரது குடும்பத்தாரிடம் நடத்திய விசாரணையில் ஆந்திராவில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சிபிசிஐடி தனிப்படை போலீசார் ஆந்திராவிற்கு விரைந்து தேடும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.