சென்னை: குருப் 2 பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இன்று (ஜன.11) வெளியிட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குருப் 2 மற்றும் 2 ஏ பணிகளுக்கான இடங்களை நிரப்ப உள்ளது. இதற்கான முதல்நிலைத் தேர்வு 2022ஆம் ஆண்டு, மே 21ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வின் முடிவுகள் 2022 ஜூன் மாதம் வெளியிடப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, முதன்மை எழுத்துத் தேர்வு 2023 பிப்ரவரி 25ஆம் தேதி நடத்தப்பட்டது. அந்த தேர்வின் முடிவுகள் டிசம்பர் மாதம் வெளியிட திட்டமிடப்பட்டு இருந்தது. இந்நிலையில் இந்த தேர்வுக்கான முடிவுகள் இன்று (ஜன.11) வெளியிடப்பட்டுள்ளது" என குறிப்பிடப்பட்டுள்ளது.
-
Combined Library State/Subordinate Services
— TNPSC (@TNPSC_Office) January 11, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data="
Examination (Interview posts) - OT LIST.
For details click: https://t.co/tqD7Iq7SLg
">Combined Library State/Subordinate Services
— TNPSC (@TNPSC_Office) January 11, 2024
Examination (Interview posts) - OT LIST.
For details click: https://t.co/tqD7Iq7SLgCombined Library State/Subordinate Services
— TNPSC (@TNPSC_Office) January 11, 2024
Examination (Interview posts) - OT LIST.
For details click: https://t.co/tqD7Iq7SLg
குரூப் 2 தேர்வில் சார் பதிவாளர்(இரண்டாம் நிலை), மாநில புலனாய்வு பிரிவு சிறப்பு அலுவலர் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 189 பணியிடங்களுக்கு 1:3 என்ற கணக்கில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு செய்யப்பட்டவர்களில் நேர்காணலில் வெற்றி பெற்றால் பணியிடங்கள் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று வெளியிடப்பட்ட தேர்வு முடிவில் குரூப்-2ஏ நேர்காணல் அல்லாத பதவிக்கான தேர்வு முடிவுகள் குறித்து எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.