ETV Bharat / state

குரூப் - 2 தேர்வில் தமிழ் புறக்கணிக்கப்பட்டதாக கூறுவது உண்மையில்லை: டிஎன்பிஎஸ்சி விளக்கம் - 2020- ம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணை

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் அலுவலருக்கும், வருவாய் அலுவலருக்கும் தற்பொழுது ஒரே நிலையில் தேர்வு கொண்டு வரப்பட்டுள்ளது என டிஎன்பிஎஸ்சி விளக்கமளித்துள்ளது.

TNPSC
author img

By

Published : Sep 29, 2019, 8:03 PM IST

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் நந்தகுமார், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சுதன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அவர்கள், கிராமப்புற மாணவர்கள் மற்றும் தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு குரூப் - 2 பாட மாற்றத்தினால் எந்த பாதிப்பும் ஏற்படாது எனவும், நன்மை தான் ஏற்படும் எனவும் தெரிவித்தனர்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் அலுவலருக்கும், வருவாய் அலுவலருக்கும் தற்பொழுது ஒரே நிலையில் தேர்வு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், அவர்களின் திறன்களை நேர்முகத் தேர்வினை விட எழுத்துத் தேர்வின் மூலம் நன்றாக சோதனை செய்ய முடியும் என்றும் கூறினர்.

TNPSC
டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம்

ஏற்கனவே இருந்த முறையில் மாணவர்கள் பொதுத் தமிழ் அல்லது பொது ஆங்கிலம் ஏதாவது ஒன்றினை தேர்வு செய்து இறுதி நிலை வரை செல்ல முடியும். ஆனால் தற்பொழுது கொண்டு வந்துள்ள முறையால் தமிழ் தெரியாதவர்கள் தேர்வில் தகுதிப்பெறுவது முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது.

குரூப்- 2 தேர்வில் தமிழை புறக்கணித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டில் உண்மையில்லை, புதிய தேர்வு முறையால் தமிழ் வழி மாணவர்களுக்கு நன்மைதான் ஏற்படும் எனவும் குரூப் 2 எழுத்துத் தேர்வில் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக பாடத்திட்டமே தற்போது வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

மேலும், டி.என்.பி.எஸ்.சி தேர்வில் ஆள்மாறாட்டம் நடைபெற வாய்ப்பில்லை என்றும், இதுவரை அதுபோன்று நடந்தது இல்லை. 2020-ஆம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணை ஒரு மாதத்தில் வெளியாகும் என்றும் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: நீட் தேர்வு ஆள்மாறாட்டம்: இருவருக்கு நீதிமன்ற காவல்!

Intro:
கிராமப்புற மாணவர்கள், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு
குருப் 2 புதிய பாடத்திட்டத்தால் பாதிப்பு ஏற்படாது
Body:

கிராமப்புற மாணவர்கள், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு
குருப் 2 புதிய பாடத்திட்டத்தால் பாதிப்பு ஏற்படாது

சென்னை,

கிராம புற மாணவர்கள் மற்றும் தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு குரூப் 2 பாட மாற்றத்தினால் எந்த பாதிப்பும் ஏற்படாது எனவும், நன்மை தான் ஏற்படும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் செயலாளர் நந்தகுமார் , தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் சுதன் ஆகியோர் தெரிவித்தனர்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் நந்தகுமார் , தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சுதன் ஆகியோர் அதன் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர்
அப்போது பேசிய செயலாளர் நந்தகுமார், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் அலுவலருக்கும், வருவாய் அலுவலருக்கும் தற்பொழுது ஒரே நிலையில் தேர்வு கொண்டு வரப்பட்டுள்ளது. ஒரே நிலையில் உள்ள பணிக்கு ஏற்கனவே குருப் 2 தேர்விற்கு எழுத்து தேர்வு இருந்தது. தற்பொழுது ஒரே நிலையில் உள்ள 2 தேர்விற்கும் எழுத்துத் தேர்வினை கொண்டு வந்துள்ளோம். அவர்களின் திறன்களை நேர்முகத் தேர்வினை விட எழுத்துத் தேர்வின் மூலம் நன்றாக சோதனை செய்ய முடியும்.

ஏற்கனவே இருந்து முறையில் மாணவர்கள் பொதுத் தமிழ் அல்லது பொது ஆங்கிலம் ஏதாவது ஒன்றினை தேர்வுச் செய்து இறுதி நிலை வரை செல்ல முடியும். ஆனால் தற்பொழுது கொண்டு வந்துள்ள முறையால் தமிழ் தெரியாதவர்கள் தேர்வில் தகுதிப்பெற முடியாது.

தேர்வில் தமிழை புறக்கணித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டில் உண்மையில்லை . புதிய தேர்வு முறையால் தமிழ் வழி மாணவர்களுக்கு நன்மைதான் ஏற்படும் குரூப் 2 எழுத்துத் தேர்வில் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக பாடத்திட்டமே தற்போது வடிவமைக்கப்பட்டுள்ளது. தமிழ் எழுத, படிக்கத் தெரியாதவர்களால் தேர்ச்சி பெற வாய்ப்பில்லை. குரூப்-2 தேர்வில் திருக்குறளுக்கு முக்கியத்தும் கொடுக்கப்பட்டுள்ளது. 2020- ம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணை ஒரு மாதத்தில் வெளியாகும்” .

தமிழ் கேள்விகள் நீக்கப்படவில்லை, கொள்குறி வகையில் கேட்கப்பட்ட தமிழ் கேள்விகள், எழுத்து தேர்வாக விளக்கமாக எழுத வேண்டும் என்கிற வகையில் தான் புதிய முறை கொண்டு வரப்படுகிறது . மேலும் இதன் மூலம் தமிழில் எழுத தெரியாதவர்கள் தேர்ச்சி பெற வாய்ப்பில்லை . மேலும் புதிய பாடத் திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால் தேர்வு எழுதக்கூடியவர்கள் தேர்வு எழுத தயாராவதற்கு போதுமான கால அவகாசம் வழங்கப்படும் .மேலும் டி.என்.பி.எஸ்.சி தேர்வில் ஆள்மாறாட்டம் நடைபெற வாய்ப்பில்லை என்றும், இதுவரை அதுபோன்று நடந்தது இல்லை .
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வில் கேள்விகள் தயார் செய்யப்படும் நடவடிக்கை அனைத்தும் ரகசியமாக மேற்கொள்ளப்படும். கேள்விகள் அச்சிடப்பட்டு அதன் பின் கவரில் வைத்து சீல் வைத்ததும், தேர்வு அறையில் மாணவர்கள் அதனை பிரிக்கும் போது தான் கேள்விகள் தவறா என்பது தெரிய வரும் . இந்த ஆண்டிற்கான டி.என்.பி.சி வேலை வாய்ப்பு குறித்து ஏற்கனவே கால அட்டவணை போடப்பட்டுள்ளது. எனவே அடுத்த ஆண்டிற்கு அட்டவணை போடப்பட்டு அறிவிப்பு வெளியிடப்படும்.

இதனைத் தொடர்ந்து தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சுதன் , தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மாற்றப்பட்டுள்ள குருப் 2 தேர்வில் ஏற்கனவே தமிழ் பாடத்திற்கு 100 மதிப்பெண்கள் என்பது மாற்றம் செய்யப்பட்டு அதிகரிக்கப்பட்டுள்ளது. குருப் 2 முதன்நிலை தேர்வில் 10 பாடங்கள் அளிக்கப்பட்டுள்ளது. அவற்றில் தமிழ் பாடத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் 2 பாடங்கள் முழுவதும் அளிக்கப்பட்டுள்ளன. இதனால் தமிழ் வழியில் பயின்ற மாணவர்களும் எளிதாக தேர்வினை எழுத முடியும்.

ஆனால் முதன்மைத் தேர்வில் உள்ள 300 மதிப்பெண்களும் தமிழ் மொழியினை மட்டும் முக்கியவதும் அளித்து கேட்கப்பட்டுள்ளது. தமிழ் மொழியில் இருந்து ஆங்கிலம் மொழி பெயர்ப்பு, ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்ப்பு, சுருக்கி எழுதுதல், விவரித்து எழுதுதல் என மதிப்பெண்கள் தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு அதிகரிக்கப்பட்டுள்ளது.
கேள்விகள் தவறாக வருவதை குறைக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. குரூப் 4 தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளில் தவறு இருந்தது குறித்து வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது. எனவே குழு அளிக்கப்படும் அறிக்கையின் அடிப்படையில் அந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார்.Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.