ETV Bharat / state

TNPSC Group 1: குரூப் 1 பணிக்கான முதன்மை தேர்வுகள் இன்று தொடக்கம்! - ஊரக வளா்ச்சித் துறை

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 (group 1) பணிக்கான முதன்மைத் தேர்வுகள் இன்று (ஆகஸ்ட் 10) சென்னையில் 22 மையங்களில் தொடங்கி வருகிற 13ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.

group 1
குரூப் 1
author img

By

Published : Aug 10, 2023, 9:58 AM IST

சென்னை: தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பாக போட்டித் தேர்வுகள் மூலம் பணியாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். அதன்படி, துணை ஆட்சியா், காவல் துணைக் கண்காணிப்பாளா், வணிக வரித் துறை உதவி ஆணையா், ஊரக வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் ஆகிய குரூப் 1-இல் காலியாக உள்ள 95 பணியிடங்களை நிரப்புவதற்கான முதல்நிலைத் தோ்வு கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பா் 19ஆம் தேதி நடைபெற்றது.

முதல்நிலைத் தோ்வை எழுத 3.22 லட்சம் பட்டதாரிகள் விண்ணப்பித்திருந்த நிலையில், 1 லட்சத்து 90 ஆயிரத்து 957 போ் தேர்வை எழுதினா். இந்த தோ்வு முடிவுகள், கடந்த ஏப்ரலில் வெளியானதைத் தொடர்ந்து, தேர்வில் வெற்றி பெற்ற 2 ஆயிரத்து162 பேர் முதன்மை தேர்வினை எழுத தகுதி பெற்றனர்.

அதன்படி, முதன்மைத் தேர்வுகள் இன்று தொடங்குகிறது. முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற 2 ஆயிரத்து 113 பேர் முதன்மை தேர்வை எழுத உள்ளனர். இதில் 1,333 ஆண் தேர்வர்களும், 780 பெண் தேர்வர்களும் அடங்குவர்.

இன்று முதல் 13ஆம் தேதி வரை நடைபெறும் தேர்வில் கட்டாயத் தமிழ் தகுதி தேர்வு, பொது அறிவு, விரிவாக எழுதுதல் உள்பட 4 தாள்களாக தேர்வுகள் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:செம்மொழி தமிழாய்வு மையத்தை நிகர்நிலை பல்கலைக்கழகமாக்க கெடு விதித்த மதுரைக்கிளை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.