தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 2017ஆம் ஆண்டில் குரூப் 2ஏ தேர்வையும் 2019ஆம் ஆண்டில் குரூப்-4 தேர்வையும் நடத்தியது.
இந்த இரு தேர்வுகளிலும் முறைகேடுகள் நடந்தது தொடர்பாக சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை நடத்திவரும் நிலையில், ஏற்கனவே குரூப்-4 முறைகேட்டில் ஈடுபட்டது தொடர்பாக 11 பேரும், குரூப் 2ஏ முறைகேடு தொடர்பாக இரண்டு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், குரூப்-2ஏ தேர்வில் முறைகேடு தொடர்பாக மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் திருவண்ணாமலை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் வேலைபார்த்து வரும் சுதாராணி என்பதும் சென்னை தலைமைச் செயலகத்தில் அலுவலக உதவியாளராகப் பணிபுரிந்து வரும் விக்னேஷ் என்பதும் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: 5, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு - முன்னாள் இஸ்ரோ இயக்குனர் கருத்து!