கரோனா தொற்று காரணமாக, தமிழ்நாடு அரசு மே 2ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அறிவித்துள்ளது. இதனால், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவிருந்த தேர்வுகள், தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டன. இந்தத் தேர்வுகள் நடைபெறும் நாள்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில் 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த துறை தேர்வுகளில், ஏற்கெனவே 129 தேர்வுகளின் முடிவுகள் கடந்த மே 8ஆம் தேதி வெளியான நிலையில், மீதமுள்ள 14 தேர்வுகளின் முடிவுகள், வரும் ஜூன் 8ஆம் தேதி வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.