தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் சுதன் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், “ஒருங்கிணைந்த பொறியியல் பணிகள் அடங்கிய பதவிகளுக்கான 733 காலிப்பணியிடங்களுக்கு ஆகஸ்ட் மாதம் 10, 25 (உதகையில் மட்டும்) ஆகிய தேதிகளில் தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வினை 82 ஆயிரத்து 594 பேர் எழுதினர்.
குருப்-2வில் அடங்கிய பதவிகளுக்கான தேர்வு முடிவுகளை முதன்மைத் தேர்வு நடத்தப்பட்ட எட்டு மாத காலத்திற்குள்ளும் குருப் 4இல் அடங்கிய பதவிகளுக்கான தேர்வு முடிவுகளை எழுத்துத் தேர்வு நடத்தப்பட்ட 72 நாள்களுக்குள்ளும் வெளியிட்டு தேர்வாணையம் சாதனை படைத்துவருகிறது.
அதன் தொடர்ச்சியாக, ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான தேர்வு முடிவுகளையும் எழுத்துத் தேர்வு நடத்தப்பட்ட மூன்று மாத காலத்தில் தற்போது வெளியிட்டுள்ளது.
எழுத்துத் தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி, பதவிகளுக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தற்காலிகமாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள ஆயிரத்து 494 விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய இணையதளமான www.tnpsc.gov.in இல் வெளியிடப்பட்டுள்ளது. இவர்கள் தங்களது மூலச் சான்றிதழ்களை வரும் 20, 29ஆம் தேதிக்களுக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்
இதையும் படிங்க...கோவை அருகே ரயில் மோதி 4 மாணவர்கள் உயிரிழப்பு!