ETV Bharat / state

குரூப் - 4 முறைகேடு எதிரொலி - விண்ணப்பத்தில் புதிய விதியமுறை - தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்

சென்னை: குரூப் - 4 தேர்வில் நடைபெற்ற முறைகேட்டின் விளைவாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் போது புதிய முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

Tnpsc application new rules
Tnpsc application new rules
author img

By

Published : Jan 22, 2020, 11:29 AM IST

குரூப்-4 தேர்வில் ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை, ராமேஸ்வரம் ஆகிய இரு தேர்வு மையங்களில் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த 262 பேர் தேர்வு எழுதினர். மேலும் முதல் 100 தரவரிசையில் அம்மாவட்டங்களைச் சேர்ந்த 35 பேர் இடம்பெற்றனர். இவர்களுள் பெரும்பாலான தேர்வர்கள் சென்னை, வேலூர், விழுப்புரம், அரக்கோணம், சிவகங்கை போன்ற வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என கண்டறியப்பட்டனர்.

இவர்கள் உள்நோக்கத்துடன் இராமநாதபுரம் மாவட்டத்தைத் தேர்வு செய்ததாகக் கூறப்படுவதுடன், குரூப் 4 தேர்வில் முறைகேடு நடந்து இருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. விசாரணைக்கு அழைக்கப்பட்ட 96 தேர்வர்களில் பெரும்பாலானவர்கள் ராமேஸ்வரத்தில் இறந்தவர்களுக்கான ஈமச்சடங்கு அளிப்பதற்குச் சென்றதால் தேர்வு செய்ததாகக் கூறியுள்ளனர்.

மேலும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தேர்வு நடத்தும் தேதியில் சென்றதாகக் கூறியதால், முறைகேடு உறுதியாகி இருக்கிறது. இந்நிலையில் வேறு மாவட்டத்திற்குச் சென்று முறைகேட்டில் ஈடுபடுவதைத் தடுக்க புதிய முறையினை தேர்வாணையம் விண்ணப்பத்தில் சேர்த்துள்ளது.

இந்நிலையில் 20 ஆம் தேதி குரூப்1 தேர்வுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது.

விண்ணப்பத்தில் புதிய விதியமுறை
விண்ணப்பத்தில் புதிய விதியமுறை
இதில் விண்ணப்பிக்கும்போது புதிய நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த புதிய அறிவிப்பானது, தேர்வு மையத்தை தேர்ந்தெடுக்கும் போது தேர்வர் சொந்த மாவட்டத்தைச் சேர்ந்தவரா ? அல்லது வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவரா என ஒரு பகுதி சேர்க்கப்பட்டுள்ளது.

தேர்வர் வெளி மாவட்டத்தைத் தேர்ந்தெடுத்தால், என்ன காரணத்திற்காக தனது சொந்த மாவட்டத்தை விடுத்து வெளிமாவட்டத்தை தேர்ந்தெடுத்துள்ளார் என்கிற விளக்கத்தை அளிக்கும் வகையில் புதிய விதிமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது. அப்படி தேர்வு செய்யும் தேர்வர்கள் வேறு மாவட்டத்தில் வேலைக்காகவா? படிப்பதற்காகவா? என்ற காரணத்தை மட்டும் கூறினால் போதுமானது என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: குரூப் - 4 தேர்வு முறைகேடு - டிஎன்பிஎஸ்சி அலுவலர்கள் விசாரணை தொடக்கம்

Intro:குருப் 4 முறைகேடு எதிரொலி

விண்ணப்பத்தில் புதிய விதியமுறை
Body:குருப் 4 முறைகேடு எதிரொலி

விண்ணப்பத்தில் புதிய விதியமுறை

சென்னை,
குருப் 4 தேர்வில் நடைபெற்ற முறைகேட்டின் விளைவாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் விண்ணப்பிக்கும் போது புதிய முறையை அறிமுகப்படுத்தி இருக்கிறது.

குரூப்-4 தேர்வில் ராமநாதபுரம்,மாவட்டம் கீழக்கரை மற்றும் ராமேஸ்வரம் ஆகிய இரு தேர்வு மையங்களில் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த 262 பேர் தேர்வு எழுதினர் .மேலும் முதல் 100 தரவரிசையில் 35 பேர் இடம்பெற்றனர் .
இவர்களுள் பெரும்பாலான தேர்வர்கள் சென்னை, வேலூர், விழுப்புரம், அரக்கோணம்,சிவகங்கை போன்ற வெளி மாவட்டங்களைச்சேர்ந்தவர்கள் என கண்டறியப்பட்டனர்

இவர்கள் உள்நோக்கத்துடன் இராமநாதபுரம் மாவட்டத்தை தேர்வு செய்ததாக கூறப்படுவதுடன் குரூப் 4 தேர்வில் முறைகேடு நடந்து இருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது

விசாரணைக்கு அழைக்கப்பட்ட 96 தேர்வர்களில் பெரும்பாலனவர்கள் ராமேஸ்வரம் இறந்தவர்களுக்கான ஈமச்சடங்கு அளிப்பதற்கு சென்றதால் தேர்வு செய்ததாக கூறியுள்ளதாக தெரிகிறது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வு நடத்தும் தேதியில் சென்றதாக கூறியதால் முறைகேடு உறுதியாகி இருக்கிறது.

இந்நிலையில் வேறு மாவட்டத்திற்கு சென்று முறைகேட்டில் ஈடுபடுவதை தடுக்க புதிய முறையினே விண்ணப்பத்தில் சேர்த்துள்ளது.

இந்த நிலையில் 20 ந் தேதி குரூப்1 தேர்வுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது.
இதில் விண்ணப்பிக்கும்போது புதிய நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதில் தேர்வு மையத்தை தேர்ந்தெடுக்கும் போது தேர்வர் சொந்த மாவட்டத்தைச் சேர்ந்தவரா ? அல்லது வெளி மாவட்டத்தை சேர்ந்தவர் என்றால் என்ன காரணத்திற்காக தனது சொந்த மாவட்டத்தை விடுத்து வெளிமாவட்டத்தை தேர்ந்தெடுத்துள்ளார் என்கிற விளக்கத்தை தேர்வர்கள் அளிக்கும் வகையில் புதிய விதிமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

மேலும் தேர்வர்கள் வேறு மாவட்டத்தில் வேலைக்காகவா? படிப்பதற்காகவா? போன்ற காரணத்தை மட்டும் கூறினால் போதுமானது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.