தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பாக பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஊதிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும், காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்பட ஆறு அம்ச கோரிக்கைகளை முன்நிறுத்தி சென்னை சேப்பாக்கத்தில் நேற்று (பிப். 19) காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து அந்தச் சங்கத்தைச் சார்ந்த நிர்வாகிகள் தலைமைத் செயலகத்தில் நேரடியாக முதலமைச்சர் அலுவலகத்திற்குச் சென்று மனு வழங்க முயற்சி செய்தனர்.
அப்போது தீவுத்தீடல் பகுதியில் காவல் துறையினர் தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இருப்பினும் காவல் துறையின் தடுப்புகளை மீறி 60-க்கும் மேற்பட்ட நபர்கள் தலைமைச் செயலகத்திற்குள் செல்ல முற்பட்டனர்.
அப்போது அங்கு காவல் துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தியதால், திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்த சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தலைமையிலான காவல் துறை அலுவலர்கள் அனைவரையும் கைதுசெய்தனர்.
சுமார் 61 பேர் கைதுசெய்யப்பட்டு சமுதாயக் கூடத்தில் தங்கவைக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து சங்கத்தின் நிர்வாகிகளுடன் தலைமைச் செயலாளர் பேச்சுவார்த்தைக்கு அழைப்புவிடுத்தார்.
இதையும் படிங்க...ஸ்ரீரங்கம் கோயில் விழாக்கள் குறித்து கூட்டம் நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவு