சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் பிப்ரவரி 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் பிப்ரவரி 22ஆம் தேதி எண்ணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகளுக்குத் தேர்தல் நடைபெறுகிறது. 15 இடங்களில் வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கைக்காக வேட்பாளர்கள் தங்களின் முகவர்களை நியமிப்பதற்கான படிவம் 24-ஐ சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் உதவி அலுவலர்களிடம் இன்றுமுதல் பெற்றுக்கொள்ளலாம். படிவத்தைப் பூர்த்திசெய்து ஒப்படைக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னை மாநகராட்சியில் இரண்டாயிரத்து 670 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஒரு வேட்பாளர் தனது வார்டிற்குள்பட்ட வாக்கு எண்ணும் மையத்தில் அமைக்கப்பட்டுள்ள மேசைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஒரு மேசைக்கு ஒருவர் எனவும், தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் மேசைக்கு ஒருவர் எனவும் முகவர்களை நியமித்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சட்டத்திற்குப் பங்கம் ஏற்பட்டால் சரிசெய்ய அனைத்தையும் செய்வோம்! - எடப்பாடி எச்சரிக்கை