தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சென்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்து 68 லட்சம் ரூபாய்க்கான காசோலையை கரோனா நிவாரண நிதிக்கு வழங்கினர்.
பின்னர் செய்தியாளரிடம் பேசிய மாநிலப் பொதுச்செயலாளர் தாஸ், "ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்குத் தர ஊதியம் 2,800 ரூபாயை 4300 ஆக உயர்த்தி அமைக்க வேண்டும், அரசாணை 101ஐ ரத்துசெய்து மீண்டும் தொடக்கக் கல்வித் துறை முழு சுதந்திரமாகச் செயல்பட ஆணை வழங்க வேண்டும், இரண்டு லட்சம் ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முதலமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளோம்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஆகஸ்ட் 1, உங்கள் பர்ஸை பதம் பார்க்கும்!