கரோனா வைரஸ் குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ள தகவலில், கரோனா வைரஸ் தொற்று அறிகுறியுடன் இருந்த 11 ஆயிரத்து 121 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 536 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 46 பேர் மகாராஷ்டிராவில் இருந்து வந்தவர்கள் எனவும், 490 பேர் தமிழகத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதுவரை மூன்று லட்சத்து 37 ஆயிரத்து 841 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், 11 ஆயிரத்து 760 பேருக்கு நோய்த் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் பூரண குணமடைந்த 234 பேர் இன்று வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதுவரை 4,406 பேர் பூரண குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும், 4,508 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மூன்று பேர் இன்று உயிரிழந்ததைத் தொடர்ந்து இறந்தவர்களின் எண்ணிக்கை 81 ஆக அதிகரித்துள்ளது. சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 53 வயது பெண்மணி, 65 வயது மூதாட்டி, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 70 வயது மூதாட்டி ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
சென்னையில் 364 பேருக்கும், செங்கல்பட்டில் 43 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 17 பேருக்கும், திருவள்ளூரில் 19 பேருக்கும் என 490 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட வாரியாக பாதிப்பு விவரங்கள்:
- சென்னை - 7,117
- திருவள்ளூர் - 566
- செங்கல்பட்டு - 537
- கடலூர் - 418
- அரியலூர் - 355
- விழுப்புரம் - 312
- திருநெல்வேலி - 206
- காஞ்சிபுரம் - 203
- மதுரை - 163
- திருவண்ணாமலை - 155
- கோயம்புத்தூர் - 146
- பெரம்பலூர் - 139
- திண்டுக்கல் - 123
- திருப்பூர் - 112
- கள்ளக்குறிச்சி - 100
- தேனி - 88
- தூத்துக்குடி - 85
- ராணிப்பேட்டை - 83
- நாமக்கல் - 76
- கரூர் - 73
- தஞ்சாவூர் - 72
- ஈரோடு - 70
- தென்காசி - 70
- திருச்சிராப்பள்ளி - 67
- விருதுநகர் - 54
- நாகப்பட்டினம் - 50
- சேலம் - 49
- கன்னியாகுமரி - 44
- ராமநாதபுரம் - 37
- வேலூர் - 34
- திருவாரூர் - 32
- திருப்பத்தூர் - 29
- சிவகங்கை - 26
- கிருஷ்ணகிரி - 20
- நீலகிரி - 13
- புதுக்கோட்டை - 7
- தருமபுரி - 5
மேலும், வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் வந்த 18 பேருக்கும், ரயில் மூலம் அந்த இரண்டு பேருக்கும் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல் 12 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளில் பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.