ETV Bharat / state

'சென்னை விமான நிலையத்தை ஹஜ் புறப்பாட்டுத் தளமாக ஒன்றிய அரசு அறிவிக்க வலியுறுத்தல்

author img

By

Published : Apr 23, 2022, 10:38 AM IST

சென்னை விமான நிலையத்தை ஹஜ் புனிதப் பயணிகளுக்குப் புறப்பாட்டுத் தளமாக மீண்டும் அறிவிக்குமாறு ஒன்றிய அரசைக் கேட்டுக் கொண்டுள்ளதாக சிறுபான்மையினர் நலத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'சென்னை விமான நிலையத்தை ஹஜ் புறப்பாட்டுத் தளமாக ஒன்றிய அரசு அறிவிக்க வேண்டும்' tn-minority-welfare-policy-brief-ask-chennai-airport-should-be-declared-hajj-departure-destination-by-union-govt

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ஆவது அமர்வு ஏப்ரல் 6 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், நேற்று (ஏப். 22) பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் நலத்துறை அமைச்சர் ராஜ்கணப்பன் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோர் மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு முன்னதாக முதலமைச்சர் ஸ்டாலின் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். அதன் பின், 2022-23ஆம் ஆண்டிற்கான சிறுபான்மையினர் நலத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்திற்கு முன்னதாக, சட்டப்பேரவையில் சிறுபான்மையினர் நலத்துறையின் கொள்கை விளக்கக் குறிப்பு வெளியிடப்பட்டது.

அதில், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அந்தமான் - நிகோபார் தீவுகள் ஆகியவற்றை சேர்ந்த ஹஜ் புனிதப் பயணிகளுக்கு சென்னை புறப்பாட்டு தலமாக அறிவிக்கப்பட்டதாகவும், கரோனா பெருந்தொற்று காரணமாக இந்திய ஹஜ் குழுவானது, இந்தியாவில் உள்ள விமான புறப்பாட்டு தளங்களை 20-ல் இருந்து 10 ஆக குறைத்து அறிவித்துள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முதலமைச்சர் ஸ்டாலின் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்

மேலும், இந்த அறிவிப்பின்படி 2022-க்கான தமிழ்நாட்டை சார்ந்த ஹஜ் புனிதப் பயணிகளுக்கு சென்னைக்கு பதிலாக கொச்சி விமான நிலையம் புறப்பாட்டு தளமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், தமிழ்நாடு ஹஜ் பயணிகளின் சிரமத்தைக் கவனத்தில் கொண்டு நல்ல கட்டமைப்புடன் செயல்படும் சென்னை விமான நிலையத்தை ஏற்கனவே இருந்தது போல் ஹஜ் புறப்பாட்டுத் தளமாக அறிவிக்குமாறு மாநில அரசு ஒன்றிய அரசைக் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அனைத்து சட்டப்பேரவை தொகுதிகளிலும் சிறு விளையாட்டு அரங்கங்கள்: மு.க.ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.