ETV Bharat / state

சம ஊதியம் கோரும் ஒப்பந்த செவிலியர்கள் மனுவை பெறவேண்டும் - தமிழக அரசு உத்தரவு! - செயலாளர் பீலா ராஜேஷ்

ஒப்பந்த செவிலியர்களுக்கு 'சம ஊதியம் வேண்டும்' என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டத்தை அடுத்து, ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் செவிலியர்களிடம் மனுக்களை பெற தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Dec 6, 2022, 1:48 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் மருத்துவ பணியாளர் வாரியத்தின் மூலம் 7243 செவிலியர்கள் ஒப்பந்த முறையில் பணி அமர்த்தப்பட்டனர். பணியில் சேர்ந்து இரண்டு வருடத்தில் பணி நிரந்தரம் செய்யப்படும் என்று பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

கடந்த 27.11.2017 ஆம் தேதி டி.எம்.எஸ் வளாகத்தில் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு எம்.ஆர்.பி செவிலியர்கள் மேம்பாட்டுச் சங்கத்தின் சார்பாகக் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். மூன்று நாட்கள் நடந்த செவிலியர் போராட்டத்திற்குத் தடை விதிக்க வேண்டும் என்று கணேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடுத்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி போராட்டத்திற்குத் தடை விதித்து இடைக்கால உத்தரவிட்டார். செவிலியர்கள் உடனடியாக போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்ப வேண்டும் என்றும் செவிலியர்களின் கோரிக்கை குறித்து அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது. தொடர்ந்து அந்த வழக்கின் இறுதித் தீர்ப்பில் ஒப்பந்த செவிலியர்களின் பணியை நிரந்தர செவிலியர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து சம வேலை செய்யும் ஒப்பந்த செவிலியர்களுக்கு ஆறு மாதத்திற்குள் 'சம ஊதியம் வழங்க வேண்டும்' என்று கடந்த 11.6.2018 அன்று உத்தரவிட்டது.

அந்த தீர்ப்பை அரசு நிறைவேற்ற வில்லை. தீர்ப்பை நிறைவேற்றாத சுகாதாரத்துறை செயலாளர் மருத்துவர்.பீலா ராஜேஷ்க்கு எதிராகத் தமிழ்நாடு எம்.ஆர்.பி செவிலியர்கள் மேம்பாட்டுச் சங்கம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் நவ.1 ஆம் தேதி அன்று முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்த நிலையில் அவர் நேரில் ஆஜரானார்.

அதனைத் தொடர்ந்து நவ.21 ஆம் தேதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில் சுகாதாரத் துறை செயலாளர் நீதிமன்றத்தை அவமதித்ததற்காக மன்னிப்பு கோரி, டிச.15 ஆம் தேதி அன்று மனு தாக்கல் செய்ய வேண்டுமென்றும், டிச.1 ஆம் தேதி முதல் ஒவ்வொரு ஒப்பந்த செவிலியர்களின் பணியின் தன்மையை நிரந்தர செவிலியர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து சம வேலை செய்யும் ஒப்பந்த செவிலியர்களுக்குச் சம ஊதியம் வழங்க வேண்டுமென்றும், எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கையை 2023 ஜன.4 ஆம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனர் ஹரிசுந்தரி இன்று (டிச.6) அனைத்து இணை இயக்குநர்களுக்கு அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், 'தமிழ்நாடு முழுவதும் பணிபுரியும் ஒப்பந்த அடிப்படை செவிலியர்களுக்கு நீதிமன்ற உத்தரவை அறிவிப்புப் பலகையில் வெளியிட வேண்டும். சமநிலைக்குச் சம ஊதியம் கோரும் விண்ணப்பம் பிரதிநிதித்துவம் அல்லது மனு ஆகியவற்றை ஒவ்வொரு செவிலியரிடம் பெற்று அனுப்பி வைக்க வேண்டும்' எனக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: ஈரோடு அரசு மருத்துவமனை ஒப்பந்த ஊழியர்கள் போராட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.