தமிழ்நாட்டில் காலியாக உள்ள ஊராட்சி பிரதிநிதிகள், நகராட்சி, மாநகராட்சி தலைவர்கள், கவுன்சிலர்கள், மேயர்கள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதற்கான வேட்புமனுத் தாக்கல் டிசம்பர் 6ஆம் தேதி நடைபெறுகிறது. 13ஆம் தேதி வேட்புமனுத் தாக்கலுக்கான இறுதிநாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் நாட்களில் காலை 7 மணி முதல் 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், ஊரக பகுதிகளில் மட்டுமே தேர்தல் நடைபெறும் என்றும், நகர்ப்புற பகுதிகளுக்கு அறிவிக்கப்படவில்லை எனவும் தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார்.
மேலும், தேர்தல் நாளன்று பதிவாகும் வாக்குகளின் எண்ணிக்கை 2020 ஜனவரி 2ஆம் தேதி நடைபெறும் என்றும், மறைமுகத் தேர்தல் 2020 ஜனவரி 11ஆம் தேதி நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தல்: அங்கீகரிக்கப்பட்ட கட்சியினருடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை