ETV Bharat / state

புதிய கல்விக் கொள்கை குறித்து கருத்து கேட்கும் உயர்கல்வித் துறை..!

tn-higher-education-secretary-interacts-with-13-university-vice-chancellors
tn-higher-education-secretary-interacts-with-13-university-vice-chanctn-higher-education-secretary-interacts-with-13-university-vice-chancellorsellors
author img

By

Published : Sep 22, 2020, 4:43 PM IST

Updated : Sep 22, 2020, 9:28 PM IST

16:38 September 22

சென்னை: தேசிய கல்வி கொள்கையில் உயர் கல்வித்துறையில் உள்ள சாதக பாதகங்கள் குறித்து பெற்றோர்கள், மாணவர்கள், பேராசிரியர்கள் ஆகியோரிடம் ஆன்லைன் மூலம் கருத்து கேட்பது என உயர்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்வி கொள்கை மும்மொழி கொள்கையை வலியுறுத்துகிறது. இதற்கு தமிழ் நாட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனிடையே தமிழ் நாட்டில் இருமொழிக் கொள்கையை தொடரும் என முதலமைச்சர் ஏற்கனவே திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

தேசியக் கல்விக் கொள்கை 2020 இல் உயர்கல்வித் துறையில் உள்ள சாதக பாதகங்களை ஆராய்வதற்கு உயர்கல்வித் துறை செயலாளர் அபூர்வா தலைமையில் குழு அமைத்து அரசு ஆணை செப்டம்பர் 3ஆம் தேதி வெளியிடப்பட்டது.

அதில் உயர்கல்வியில் உள்ள பல்வேறு அம்சங்களை ஆராய்ந்து அரசுக்கு கருத்து தெரிவிக்க சென்னை பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர்கள் எஸ். பி.தியாகராஜன், துரைசாமி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பிச்சுமணி, அழகப்பா பல்கலைக்கழகத் துணைவேந்தர் ராஜேந்திரன், மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன், திருவள்ளுவர் பல்கலைக்கழக துணைவேந்தர் தாமரைச்செல்வி ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.

தமிழ்நாட்டில் உயர்கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் 13 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுடன் உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா தலைமையிலான உயர்மட்ட குழு இன்று வீடியோ கான்பரன்சிங் மூலம் புதிய கல்விக் கொள்கை குறித்து ஆலோசனை நடத்தியது. சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேசிய கல்விக் கொள்கை குறித்து பல்வேறு கருத்துக்கள் விவாதிக்கப்பட்டன.

தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாட்டில் அமல்படுத்துவது குறித்து மாணவர்கள்,பெற்றோர்கள், கல்வியாளர்கள், பேராசிரியர்கள் ஆகியோரிடம் ஆன்லைனில் கருத்துக் கேட்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்யவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை உயர்கல்வித்துறை விரைவில் தெரிவிக்கும் என தெரியவந்துள்ளது. 

இதையும் படிங்க: ஆக்ஸிஜன் தடைப்பட்டு இருவர் உயிரிழப்புக்கு அரசின் அலட்சியமே காரணம்'

Last Updated : Sep 22, 2020, 9:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.