ETV Bharat / state

‘சாலை விபத்து மரணங்களை 50 சதவீதம் வரை குறைக்க நடவடிக்கை’ - உயர் நீதிமன்றம் சென்னை

சென்னை: சாலை விபத்துகளால் ஏற்படும் மரணங்களை 50 சதவீதம் வரை குறைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சாலை விபத்து மரணங்களை 50 சதவீதம் வரை குறைக்க நடவடிக்கை

author img

By

Published : Mar 3, 2020, 10:55 PM IST

இரு சக்கர வாகன ஓட்டிகள், அவர்களுடன் அமர்ந்து பயணிப்பவர் இருவரும் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்கக் கோரியும், நான்கு சக்கர வாகன ஓட்டிகள் சீட் பெல்ட் அணிவதை கட்டாயமாக்கக் கோரியும், கொரட்டூரை சேர்ந்த கே.கே ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, போக்குவரத்துத் துறையின் முதன்மை செயலர் ஜவஹர், காவல்துறை சட்டம் ஒழுங்கு பிரிவு உதவி ஐஜி சாம்சன் ஆகியோர் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், தமிழ்நாடு முழுவதும் கடந்த 2018ஆம் ஆண்டு நவம்பர் முதல் 2019 நவம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்றதாக 68 லட்சத்து 76 ஆயிரத்து 452 பேர் மீதும், நான்கு சக்கர வாகனத்தில் சீட் பெல்ட் அணியாமல் சென்றதாக 15 லட்சத்து 90 ஆயிரத்து 382 பேர் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதாக 2 லட்சத்து 7 ஆயிரத்து 291 பேர் மீதும், வாகனம் ஓட்டும்போது செல்போனை உபயோகித்ததாக 4 லட்சத்து 63 ஆயிரத்து 543 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிகள் முழுமையாக பின்பற்றப்பட்டு வருவதால், கடந்த 2016ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் தற்போது சாலை விபத்துகளால் ஏற்படும் மரணங்கள் 38 சதவீதம் குறைந்துள்ளதாகவும், அதனை இந்தாண்டு 50 சதவீதமாக குறைக்க அரசுத் துறைகள் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, தமிழ்நாடு அரசு தரப்பில் அடுத்தகட்ட அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை வரும் மார்ச் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.