ETV Bharat / state

நெய்வேலி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நிதியுதவி வழங்க அமித்ஷாவிடம் கோரிக்கை - விபத்து குறித்து பேச்சுவார்த்தை

சென்னை: என்எல்சி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தேவையான நிதியுதவி வழங்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

tn govt request to center for helps to nlc accident

author img

By

Published : Jul 2, 2020, 6:56 PM IST

கடலூர் மாவட்டம், நெய்வேலி என்எல்சி அனல் மின்நிலையத்தின் 5ஆவது யூனிட் கொதிகலன் ஒன்று நேற்று (ஜூலை 1) திடீரென வெடித்து விபத்துக்குள்ளானது. இதில் ஏழு பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 17 பேர், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து தமிழ்நாடு முதலமைச்தர் எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டறிந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய அரசின் சார்பில் தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என உறுதியளித்தார்.

இந்நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் மாநில அரசு சார்பில் தேவையான நடவடிக்கைகள் எடுத்துவருகிறோம். மத்திய அரசு சார்பில் தேவையான நிதியுதவியை வழங்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, விபத்து குறித்து என்எல்சி நெய்வேலியில் தொழிற்சங்க நிர்வாகிகள், பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள், என்எல்சி நிர்வாக இயக்குநர் ராகேஷ்குமார் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் தொழிற்சங்கத்தினர், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் இழப்பீடும், வீட்டில் ஒருவருக்கு நிரந்தர வேலையும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை என்எல்சி ஏற்க மறுத்ததால் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.