ETV Bharat / state

இறுதி பருவத் தேர்வுகள் நடத்த அரசு அனுமதி - தலைமைச் செயலர் உத்தரவு

author img

By

Published : Sep 15, 2020, 9:54 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் ஆகியவற்றில் பயிலும் மாணவர்களுக்கு இறுதி பருவ தேர்வு நடத்துவதற்கு அனுமதி அளித்து மாநில அரசின் தலைமைச் செயலர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.

தலைமைச் செயலாளர் உத்தரவு
தலைமைச் செயலாளர் உத்தரவு

இது குறித்து தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலர் சண்முகம் வெளியிட்டுள்ள அரசாணையில், “தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் செப்டம்பர் 30ஆம் தேதி வரை திறக்கப்படாது என பேரிடர் மேலாண்மை சட்டத்தின்படி அறிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானியக் குழுவின் வழிகாட்டுதலின்படி இறுதி பருவத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு நடத்துவது குறித்து ஆலோசிக்க வல்லுநர் குழு அமைக்கப்பட்டது.

மேலும் பல்கலைக்கழக மானியக்குழுவின் வழிகாட்டுதலின் படி செப்டம்பர் மாதத்திற்குள் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும். தமிழ்நாட்டில் அமைக்கப்பட்ட வல்லுநர் குழுவின் ஆலோசனையின் அடிப்படையில் ஆன்லைன், எழுத்துத் தேர்வு, ஆன்லைன் மற்றும் எழுத்து தேர்வு இந்த முறைகளில் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் தேர்வை நடத்திக் கொள்ளலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் கரோனா பாதுகாப்பு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தேர்வுகள் நடத்த அரசு அனுமதி அளிக்கிறது. 2019-20ஆம் கல்வி ஆண்டில் பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் கீழ் இறுதி தேர்வினை மாணவர்கள் எழுத அனுமதி வழங்கப்படுகிறது. சென்னை பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் முறையில் செப்டம்பர் 21ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரையிலும், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் முறையில் செப்டம்பர் 17ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரையும், அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் முறையில் செப்டம்பர் 22 முதல் 29ஆம் தேதி வரையும், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் முறையில் செப்டம்பர் 21ஆம் தேதி முதல் அக்டோபர் 7 வரையிலும், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் செப்டம்பர் 21 முதல் 25ஆம் தேதி வரை ஆன்லைன் முறையிலும், காரைக்கால் மதர் தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மற்றும் எழுத்துத் தேர்வு முறையில் செப்டம்பர் மாதம் நடத்த அனுமதி வழங்கப்படுகிறது.

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் செப்டம்பர் 15 முதலும், திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் செப்டம்பர் 21 முதல் 30ஆம் தேதி வரையிலும், சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் செப்டம்பர் 21ஆம் தேதி முதல் 29 வரையிலும், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் செப்டம்பர் 19 முதல் 30 வரையிலும், வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் செப்டம்பர் 16 முதல் 23ஆம் தேதி வரையிலும், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் செப்டம்பர் 17 முதல் 29ஆம் தேதி வரையிலும், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் செப்டம்பர் 21 முதல் 30ஆம் தேதி வரையிலும் ஆன்லைன் மூலம் தேர்வுகள் நடத்த அனுமதி வழங்கப்படுகிறது.

தொழில்நுட்ப கல்வி இயக்கத்தின் கீழே உள்ள பாலிடெக்னிக் கல்லூரி உள்ளிட்டவற்றில் செப்டம்பர் 23ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் தேர்வு நடத்த அனுமதி வழங்கப்படுகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க...நீட் தேர்வு மரணத்திற்கு திமுக தான் காரணம் - சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஆவேசம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.