ETV Bharat / state

'சிறந்த சமூக சேவகர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்' - தமிழ்நாடு அரசு - மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

சென்னை: பெண்கள் முன்னேற்றத்துக்காக சேவைபுரிந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனம் விருதுகளுக்காக சம்பந்தப்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

Tn govt announced to Apply for Best Social Worker Award

author img

By

Published : Jul 13, 2020, 5:31 PM IST

இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”2020ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவின்போது பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவைபுரிந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனத்திற்கான விருதுகள் தமிழ்நாடு முதலமைச்சரால் வழங்கப்படவுள்ளது. குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் சமூக நலன் சார்ந்த நடவடிக்கைகள், பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாகப் பணிபுரிந்து, மகளிர் நலனுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றும் சமூக சேவகர் மற்றும் நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம் அரசு அங்கீகாரம் பெற்ற சமூக சேவை நிறுவனமாக இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர் தமிழ்நாட்டைப் பிறப்பிடமாகக் கொண்டவராகவும், 18 வயதிற்கு மேற்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையுடன் வர வேண்டும்.

மாநில அளவிலான உயர்மட்டக் குழு விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்து விருதுக்கு தகுதியான தனிநபர் மற்றும் நிறுவனத்தை அரசு தேர்ந்தெடுக்கும். விண்ணப்பதாரரின் கருத்துரு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் புத்தக வடிவத்தில் தயாரிக்கப்பட்டு, அளவு புகைப்படத்துடன் பெறப்பட வேண்டும்.

எனவே, அனைத்து மாவட்டங்களிலும் பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவைபுரிந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனங்கள், சம்பந்தப்பட்ட மாவட்ட சமூக நல அலுவலர் அவர்களை நேரில் அணுகி வருகின்ற திங்கட்கிழமைக்குள் (20.07.2020) கருத்துருக்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.