தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இதையடுத்து தலைநகர் சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் கரோனா சிகிச்சை மையங்களை அமைக்க ரூ.69 கோடியை தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்த நிதியானது, மாநிலம் முழுவதிலும் உள்ள 36 மாவட்டங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் நோயாளிகளுக்கு உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்காக வழங்கப்படவுள்ளது.
மதுரை, ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட 36 மாவட்டங்களில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால், அந்தந்த மாவட்டங்களில் புதிய கரோனா சிகிச்சை மையங்கள் உருவாக்கவும் இந்த நிதியை ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க: தலைநகரில் ஆம்புலன்ஸ் வசதி போதியளவில் உள்ளதா?